சூரிய கிரகணத்தின் போது உணவு சாப்பிட்டால் என்னவாகும்..?

Advertisement

Can We Eat Food During Solar Eclipse in Tamil

அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதியான இன்று இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ்வுள்ளது. பொதுவாக சூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். அதை நாம் இன்று வரை கடைபிடித்து வருகின்றோம்.

அதேபோல, சூரிய கிரகணம் நிகழும் போது நாம் அனைவரும் சாப்பிட கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையா..? பொய்யா..? என்று ஆராய்ந்திருக்க மாட்டோம். அதனால் இந்த பதிவின் வாயிலாக சூரிய கிரகணத்தின் போது உணவு சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சூரிய கிரகணம் 2024 எப்போது நிகழும்.. தமிழ்நாட்டில் தெரியுமா.. 

சூரிய கிரகணத்தின் போது உணவு சாப்பிடலாமா..? 

பொதுவாக சூரிய கிரகணத்தை பற்றி சாஸ்திரங்கள் கூறுவது என்னவென்றால், சூரிய கிரகண காலமானது, துரதிஷ்டவச காலமாக பார்க்கப்படுகிறது. அதனால் நாம் சூரிய கிரகணத்தின் போது உணவு சாப்பிட்டால் அது பல நோய்கள் உண்டாவதற்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சூரிய கிரகணத்தின் போது உணவு பரிமாறுபவர்களுக்கு கூட உடல்நல குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

அதனால் தான் பெரியவர்கள் சூரிய கிரகணத்தின் போது உணவு உண்ணக்கூடாது என்று கூறினார்கள்.

சூரிய கிரகணம் அன்று என்ன செய்ய வேண்டும்..

சூரிய கிரகணத்தின் போது சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவதால் தான் சூரிய கிரகணமானது நிகழ்கிறது. அப்படி சந்திரனானது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் போது, மனித உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும் கதிர்வீச்சுக்களை வெளியிடுகிறது.

இந்த கதிர்வீச்சுகளானது, உணவை மோசமாக பாதிக்கின்றன. மேலும், தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாவை உருவாக்குகின்றன.

இதனால் நாம் சூரிய கிரகண நேரத்தில் உணவுகளை உட்கொள்வதால் நம் உடலில் பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது.

மேலும் இந்த சூரிய கிரகணத்தின் போது வெளிவரும் கதிர்வீச்சுகளானது, மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், இதனால் அடுத்த பிறவியிலும் பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.

சூரிய கிரகணத்தின் போது இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.. தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும்..

அதுமட்டுமில்லாமல், சூரிய கிரகணத்தில் நாம் சாப்பிட்டால் வயிற்றில் பல உபாதைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக வயிற்றில் வலி, அஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன.

தடுக்கும் பாரம்பரிய முறை: 

எனவே சமைத்த உணவுகளில் கிரகணம் தொடங்கும் முன், அந்த உணவுகளில் துளசி இலைகளை போடவேண்டும். ஏனென்றால், துளசியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அதனால் துளசியை உணவு சமைக்கும் பாத்திரங்கள் மற்றும் சமைத்த உணவில் போடுவது நல்லது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement