Colors Of Glass Bangles And Their Benefits in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக பெண்கள் என்றால் அவர்களுக்கு மனதில் சின்ன சின்ன ஆசைகள் நிறையவே இருக்கும். அப்படி பெண்களுக்கு இருக்கும் சின்ன சின்ன ஆசைகளில் இதுவும் ஓன்று. எது என்று யோசிக்கிறீர்களா..? நாள் வளையல்களை பற்றி தான் கூறுகிறோம். பொதுவாக பெண்கள் அனைவருக்குமே வலையல் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.
அதிலும் கண்ணாடி வளையல்கள் என்றால் சொல்லவே வேண்டாம். வளையல் என்றாலே அதில் கண்ணாடி வளையல்கள் தான் முதலிடத்தில் இருக்கின்றன. அதுபோல வளையல்கள் அணிவதற்கு நம் முன்னோர்கள் சில அறிவியல் காரணங்களை கூறியுள்ளார்கள். அதை பற்றி தெரிந்து கொள்ள நினைத்தால் கீழ் இருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.
நகை அணிவதற்கான அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..
கண்ணாடி வளையல்களின் நிறங்களும் அதன் சிறப்புகளும்:
பொதுவாக நாம் என்ன தான் தங்கத்தில் வளையல் அணிந்தாலும், கண்ணாடி வளையல் அணியும் சிறப்பு கிடைக்காது. கண்ணாடி வளையல் என்றாலே அது தனி அழகு தான். நாம் அழகுக்காக தான் கண்ணாடி வளையல் அணிகிறோம் என்று இல்லை. கலர் கலராக அணியும் கண்ணாடி வளையல்களை பின்னால் பல சிறப்புகள் மறைந்திருக்கின்றன. அதாவது, ஒவ்வொரு கலர் கண்ணாடி வளையல்களுக்கு பின்னாலும் ஒரு சிறப்பு இருக்கிறது. அது என்னவென்று நம் பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வளையல் என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான பங்கலி அல்லது பாங்க்ரி என்பதிலிருந்து வந்தது. அதாவது ஆயுதங்களை அலங்கரிக்கும் ஆபரணங்கள் முந்தைய நாகரிகத்திலிருந்து வளையல்கள் ஒரு நாகரீக உபகரணமாக இருந்து வருகின்றன.
மஞ்சள் நிற வளையல்:
பொதுவாக மஞ்சள் நிறம் தெய்வீக அம்சம் கொண்ட நிறமாக பார்க்கப்படுகிறது. நாம் மஞ்சள் நிறத்தில் கண்ணாடி அணிவதால் அது நமக்கு மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது.
சிவப்பு நிற வளையல்:
சிவப்பு நிறம் தெய்வங்களின் நிறமாக பார்க்கப்படுகிறது. இதுவும் தெய்வீக அம்சம் கொண்ட நிறமாக தான் பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் பல பெண்கள் சிவப்பு நிற கண்ணாடி வளையல்களை தான் அணிகிறார்கள். இந்த சிவப்பு நிற கண்ணாடி வளையலை அணிவதால் நமக்கு எதையும் எதிர்கொள்ளும் சக்தி கிடைக்கிறது.
கண்ணாடி வளையல் கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா..
பச்சை நிற வளையல்:
பெரும்பாலும் பச்சை நிறம் பலருக்கும் பிடித்த நிறமாக இருக்கிறது. அதனால் பெண்கள் பச்சை நிறத்தில் வளையல்களை அணிகிறார்கள். அப்படி நாம் பச்சை நிறத்தில் வளையல்கள் அணியும் போது, அந்த பச்சை நிறமானது நம் மனதை சாந்தப்படுத்துகிறது. அதாவது பச்சை நிறமானது நம் மனதை எப்பொழுதும் அமைதியாக வைத்து கொள்ள உதவுகிறது.
வெள்ளை நிற வளையல்:
பொதுவாக வெள்ளை நிறம் அனைவரையும் கவரும் நிறமாக இருக்கிறது. நாம் வெள்ளை நிறத்தில் வளையல் அணியும் போது அது நமக்கு இனிய தொடர்பை ஏற்படுத்தி கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
கருப்பு நிற வளையல்:
பொதுவாக நம்மில் பலருக்கும் கருப்பு நிறம் மிகவும் பிடித்த நிறமாக இருக்கும். பலரும் எந்த பொருள் வாங்கினாலும் கருப்பு நிறத்தில் தான் வாங்குவார்கள். அப்படி கருப்பு நிறத்திற்கு தனி சிறப்பு இருக்கிறது. இந்த கருப்பு நிற வளையலானது மனதில் தைரியத்தை அதிகரிக்க செய்கிறது.
ஆரஞ்சு நிற வளையல்:
நாம் ஆரஞ்சு நிறத்தில் வளையல் அணியும் போது, அது நமக்கு வெற்றியை தேடி தரும் என்று சொல்லப்படுகிறது.
எனவே கண்ணாடி வளையல்களானது மகா லக்ஷ்மியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. அதனால் பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணிவது மிகவும் நல்லது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |