வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தேஜாவூ என்றால் என்ன ?.. இது தோன்ற காரணம் என்ன ?

Updated On: April 10, 2026 6:06 PM
Follow Us:
dejavu enral enna
---Advertisement---
Advertisement

Dejavu Endral Enna In Tamil

நம் வாழ்க்கையில் நிறைய நோய்களை பற்றி தெரிந்து வைத்திருப்போம். ஒவ்வொரு நோயும் எதனால் வருகிறது என்ற  காரணங்களும் நமக்கு தெரியும். இப்போது பரவலாக எல்லோரும் தெரிந்து கொள்ள நினைக்கும் விஷயம் தான் தேஜாவூ. இது எதனால் வருகிறது அதன் காரணங்கள் என்ன என்பது நிறைய பேருக்கு தெரிவதில்ல்லை. பலர் இதனை நினைத்து மிகவும் பயப்படுகிறார்கள். தேஜாவூ பற்றி இந்த பதிவில் பற்றி பார்ப்போம்.

தேஜாவூ என்றால் என்ன ?

dejavu in tamil

தேஜாவூ என்பது நீங்கள் ஒரு இடத்திற்கு செல்கிறீர்கள் என்றால் அந்த இடத்தில் நடக்கும் சம்பவங்கள் ஏற்கனவே உங்களுக்கு நடந்திருப்பது போல் தோன்றுவது ஆகும். உதாரணத்திற்கு : நீங்கள் உங்கள் நண்பர்களிடம் ஏதோ ஒரு விஷயத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்குறீர்கள். அப்போதுதான் முதல்முறையாக அந்த விஷயத்தை பேசுவீர்கள் ஆனால் முன்கூட்டியே பேசியது போல் தோன்றுவது. சுருக்கமாக சொன்னால் நிகழ்காலத்தில் நடப்பவை ஏற்கனவே நடந்தது போல் தோன்றும் ஒரு உணர்வு. இது மூளையில் ஏற்ப்படும் சிறிய மாற்றம் அவ்வளவு தான் மற்றபடி இது நோயல்ல. தேஜாவூ என்ற பெயர் பிரென்ச் மொழியாகும். பிரென்ச் மொழியில் தேஜாவூ என்றால் “ஏற்கனவே பார்த்தது” என அர்த்தம். பலரும் இந்த தேஜாவூ உணர்வு தோன்றும்போது அது அவர்களின் முட்பிறவியின் நினைவுகளாகவும் நம்புகிறார்கள். எனினும் இதற்கு சரியான விளக்கம் ஆய்வு செய்தவர்கள் கூறவில்லை. என்னதான் அறிவியல் ரீதியாக நாம் முன்னேறி இருந்தாலும் இன்னும் ஆய்வாளர்களால் மனித மூளையை பற்றி முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை.  எப்படி தூங்கும்போது கனவுகள் நமக்கு வருகிறது என்பது ஆய்வாளர்களை ஆராய்ச்சி செய்வதை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் முழுமையான விளக்கமும் இன்னும் பெறப்படவில்லை. மனித உயிரினம் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் அப்பாற்ப்பட்ட சக்தி.

தேஜாவூ தோன்ற காரணம் :

நமது மூளையின் நரம்பு மண்டலத்தில் காணப்படும்  டெம்பரல் லோப் என்ற பகுதியில் தான் நம்முடைய நினைவுகள், நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றை சேமித்து வைத்து இருக்கும் நமது மூளை. இந்த டெம்பரல் லோப் நரம்பு மண்டலத்தில் இராசயனம் அதிகம் சுரப்பது அல்லது குறைவாக சுரப்பது என ஏற்படும் மாற்றம் தான் தேஜாவூ எனப்படுகிறது. 

மனித மூளை பற்றிய தகவல்கள்

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn 
Advertisement

Indhu Mathi

நான் இந்துமதி பொதுநலம் வலைத்தளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். ஆரோக்கியம் ,அழகு குறிப்பு மற்றும் சமையல் குறிப்பு போன்றவற்றின் தகவல்களை உங்களுக்கு சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now