How Much Water Should you Drink Per Day Based on Your Body Weight in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் தவறாமல் குடிக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், நம் உடலில் எடைக்கு ஏற்றவாறு தண்ணீர் அருந்துவது தான் நல்லது.
பெரும்பாலானவர்கள் தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் தவறான ஒன்று. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள இரத்தம் சுத்தமாகும். இதனால் எந்த நோயும் எளிதில் நம்மை தாக்காது. ஆகையால், உங்கள் எடைப்படி ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.? என்று பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தெரிந்து கொள்ளுங்கள்.
நின்று கொண்டு தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? அப்போ இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!
How Much Water Should i Drink for Body Weight in Tamil- மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.?
உடல் எடை | தண்ணீர் அளவு |
45 கிலோ | 1.9 லிட்டர் |
50 கிலோ | 2.1 லிட்டர் |
55 கிலோ | 2.3 லிட்டர் |
60 கிலோ | 2.5 லிட்டர் |
65 கிலோ | 2.7 லிட்டர் |
70 கிலோ | 2.9 லிட்டர் |
75 கிலோ | 3.2 லிட்டர் |
80 கிலோ | 3.5 லிட்டர் |
85 கிலோ | 3.7 லிட்டர் |
90 கிலோ | 3.9லிட்டர் |
95 கிலோ | 4.1 லிட்டர் |
100 கிலோ | 4.3 லிட்டர் |
தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்.?
எப்போதும் உட்கார்ந்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் தண்ணீரை வாய்வைத்து தான் குடிக்க வேண்டும். இதுதான் தண்ணீர் குடிப்பதற்கான சரியான முறை. நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். தாகம் எடுக்கும் வேளையில் நாம் சிறிதும் யோசிக்காமல் நின்று கொண்டே தண்ணீர் குடிப்போம். எனவே, இனிமேல் தண்ணீர் குடிக்கும் போது கீழே அமர்ந்து தண்ணீர் குடியுங்கள்.
தண்ணீர் எப்போது குடிக்கலாம்.?
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவே, உடல் எடை குறைவாக உள்ளவர்கள் சாப்பிட பிறகு 30 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்.
பூஜை அறையில் தண்ணீர் வைப்பது ஏன்.? உங்களுக்கு தெரியுமா.?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |