What Is The Benefit Of Having a Double Head in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் தகவலும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். சரி நம் அனைவருக்குமே இரட்டை சுழி பற்றி தெரியும். பொதுவாக குழந்தைகள் பிறக்கும் போது, அவர்களின் தலையில் ஒரு சுழி அல்லது இரண்டு சுழி இருப்பதை நாம் பார்த்திருப்போம்.
அதிலும் பள்ளி பருவத்தில் ஏதாவது ஒருவருக்கு தலையில் இரட்டை சுழி இருந்து விட்டால் உடனே அவர்களை கிண்டல் செய்ய ஆரம்பித்துவிடுவோம். காரணம் இரட்டை சுழி இருக்கும் ஆண்கள் 2 திருமணம் செய்வார்கள் என்று கிராம புறங்களில் அதிகமாக பேசப்படும் வார்த்தையாகும். சரி அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக இரட்டை சுழி இருந்தால் என்ன அர்த்தம், இரட்டை சுழி இருப்பவர்களின் குணங்கள் எப்படி இருக்கும், மேலும் இரட்டை சுழி இருந்தால் 2 திருமணம் நடக்குமா என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
தலையில் இரட்டை சுழி இருந்தால் என்ன பலன்
இரட்டை சுழி இருந்தால் என்ன அர்த்தம்:
பொதுவாக இரட்டை சுழி என்பது அனைவருக்கும் இருக்காது. நம்மில் இருக்கும் ஒரு சிலருக்கு தான் தலையில் இரட்டை சுழி இருக்கும். எனவே இரட்டை சுழி இருப்பவர்களை பார்ப்பது மிகவும் அரிது. அதுமட்டுமில்லாமல், NHGRI ஆய்வுகளின் படி உலக மக்கள் தொகையில் 5% பேருக்குத் தான் தலையில் இரட்டை சுழி இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுபல கிராமப்புறங்களில் தலையில் இரட்டை சுழி இருந்தால் உடனே அவனுக்கு இரண்டு கல்யாணம் தான் நடக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அது உண்மை கிடையாது.
பொதுவாக அறிவியல் கூறுவது என்னவென்றால், ஒருவருக்கு தலையில் இரட்டை சுழி இருந்தால், அது மரபணு காரணமாக அவர்களின் தாத்தா, பாட்டி என முன்னோர்களுக்கு இருந்தால் வரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அதுபோல இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரண்டு திருமணம் நடக்கும் என்று அதிகமாக பேசுகிறார்கள். ஆனால், இப்படி சொல்வதற்கு, சரியாக நிரூபிக்கப்பட்ட எந்த வித உண்மைகளோ, சாட்சிகளோ அல்லது தகவல்களோ கிடையாது. எனவே இரட்டை சுழி இருந்தால் இரண்டு திருமணம் நடக்கும் என்பது உண்மை கிடையாது.
பாம்புகள் பழிக்கு பழி வாங்கும் என்பது உண்மையா..? பொய்யா..
இரட்டை சுழி இருப்பவர்களின் குணங்கள்:
பொதுவாக இரட்டை சுழி இருப்பவர்கள் எப்பொழுதும் எதையும் நேர்மையாகவும் உண்மையாகவும் பேசுபவராக இருப்பார்கள். இவர்கள் எதையும் நேரடியாக பேசும் வல்லமை கொண்டவர்கள். இவர்கள் எல்லோரிடமும் அன்பாக பழகுவார்கள். உடன் இருப்பவர்களுக்கு ஏதாவது கஷ்டம் என்றால், உடனே ஓடிநின்று உதவி செய்வார்கள்.
இப்படி தலையில் இரட்டை சுழி இருந்தால், இவர்களுக்கு சொந்தபந்தங்கள் அதிகமாக இருக்கும். அதுபோல தலையில் இரட்டை சுழி இருக்கும் குழந்தைகள் சுட்டித்தனமும் விளையாட்டும் குறும்பும் அவர்களிடம் அதிகமாக இருக்கும். இவர்களிடம் பொறுமை அதிகமாக காணப்படும். மேலும் இவர்கள் தன்னை சுற்றி இருப்பவர்களை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வார்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |