What Color To Wear For Summer in Tamil
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் கொளுத்தும் கோடைக்காலத்தில் எந்த மாதிரி நிறத்தில் ஆடை அணிய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக தற்போது கோடை வெயில் நம்மை வைத்து விளையாடி கொண்டிருக்கிறது. இந்த மாதிரி நேரத்தில் வெளியில் வரவே பயமாக இருக்கிறது. அதிலும் சிலருக்கு வீட்டில் இருக்க கூட பயமாக தான் இருக்கிறது. காரணம் அந்த அளவிற்கு வெயில் நம்மை வாட்டி வதைக்கிறது.
இந்த மாதிரி கோடைக்கால வெயிலுக்கு நாம் எந்த நிறத்தில் ஆடை அணிந்தால் நல்லது என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதனால் இந்த கோடை கால வெயிலை சமாளிக்கவும், அதிலிருந்து நம்மை பாதுகாக்கவும் எந்த மாதிரி ஆடை அணிய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
எந்த நிற சட்டை அணிந்தால் வியர்வை வெளியில் தெரியாது
கோடைக்காலத்தில் எந்த நிறத்தில் ஆடை அணிய வேண்டும்:
வெள்ளை:
பொதுவாக வெயில் காலத்தில் அணிய வேண்டிய ஆடைகளில் வெள்ளை நிறமானது முதலிடத்தில் இருக்கிறது. காரணம் வெயில் நேரத்தில் நாம் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தால், அது அதிகபட்ச வெயிலை பிரதிபலிக்கிறது. அதனால் தான் வெயில் காலத்தில் வெள்ளை நிறத்தில் ஆடை அணிகிறார்கள். எனவே வெயில் காலத்தில் வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது நன்றாக சுவாசிக்கவும், சிறந்த ஆற்றலையும் தருகிறது.
மஞ்சள் நிறம்:
மஞ்சள் நிறமானது மங்களகரமானதாக இருக்கிறது. எனவே இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற உடைகளில் மஞ்சள் நிறம் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கோடைக்காலத்தில் மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணியும் போது, இது சூரிய கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
எந்த கிழமையில் எந்த கலர் ட்ரெஸ் அணிய வேண்டும்..
ஆரஞ்சு நிறம்:
வெயில் காலத்திற்கு ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது மிகவும் சிறப்பு. கொளுத்தும் கோடைகால வெயிலில் இருந்து வரும் மோசமான வெப்ப கதிர்வீச்சிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் கோடைக்காலத்தில் ஆரஞ்சு நிறமானது சருமத்தைப் பாதுகாக்கிறது.
பிங்க் நிறம்:
பொதுவாக பிங்க் கலர் என்றால், ஆண்கள் பெண்கள் என்று அனைவருக்குமே பிடிக்கும். அதிலும் பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம். இந்த பிங்க் நிறமானது கோடைக்காலத்தில் நம்மை திறம்பட பாதுகாக்கிறது. அதனால் கோடைக்காலத்தில், பிங்க் நிறத்தில் ஆடை அணியலாம்.
நாள் முழுவதும் வியர்வை நாற்றம் வராமல் இருக்க இதை Follow பண்ணுங்க..
பச்சை நிறம்:
பொதுவாக பச்சை நிறமானது வானவில்லில் இருக்கும் நிறங்களில் ஓன்று. இந்த பச்சை நிறமானது வெயிலின் கதிர்வீச்சுகளை பிரதிபலிக்கிறது. அதனால் கோடைக்கால வெயிலுக்கு பச்சை நிறத்தில் ஆடை அணியலாம். மேலும் பச்சை நிறமானது வெயில் காலத்தில் குளிர்ச்சியை கொடுக்கிறது.
சிவப்பு நிறம்:
சிவப்பு நிறமானது கோடைகாலங்களில் அணிவதற்கு சிறந்த நிறமாக இருக்கிறது. ஆனால் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய விரும்புபவர்கள் அவரவர்களின் நிறத்தை பொறுத்து தேர்வு செய்வது நல்லது. அதாவது வெளிர் நிறத்தில் இருப்பவர்கள் சிவப்பு நிறத்தில் ஆடை அணியலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information in Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |