உங்க Photo-வ யாராச்சும் Morphing பண்றங்கனா பயப்படாம இத மட்டும் பண்ணுங்க

Advertisement

What to do When Someone Uploads Your Morphed Photos!

நாம் நாடு எதில் தன்னுடைய வளர்ச்சியை காட்டிக்கிறதோ இல்லையோ இந்த AI பயன்படுத்திவதில் நிறைய வளர்ச்சியை கண்டிருக்கின்றது. சமீப காலத்தில் பார்த்திருப்போம் சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி அவர்கள் குரலில் எல்லா பாடல்களையும் பாடுவதுபோல், இவையாவும் AI பயன்படுத்தி செய்யப்பட்டதாகும். அதேபோல் AI Deep Fake என்ற தொழில்நுட்பம் கொண்டு நடிகைகளின் போட்டோக்களை morphing செய்து அதை வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பார்கள். அது மிகவும் வியப்பாக இருந்தது.

அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாமானியர்களான நாம் என்ன செய்ய முடியும். முதலில் எதற்கும் துணிவோடு செயல்படவேண்டும், ஒரு வேலை உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவருக்கோ இப்படி நடந்தால் பதறாமல் கீழே உள்ள வழிமுறைகளை சற்று பயன்படுத்தி பாருங்கள்.

Morphing செய்த உங்க போட்டோவ Upload செஞ்சிட்டாங்கன்னா என்ன செய்வது?

உங்களது புகைப்படம் தவறாக பயன்படுத்தபட்டுள்ளது என்றால் முதலில் பயந்து எந்த விதமான முடிவுகளையும் எடுத்துவிடாதீர்கள். உங்கள் பிரச்சனையை மிக எளிதாக சரி செய்துவிடலாம். எப்படி என்று கீழே பாருங்கள்.

  • உங்களுக்கு அருகில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள்.
  • cybercrime.gov.in இல் ஆன்லைன் புகாரைப் பதிவுசெய்யலாம்.
  • அதைப் பற்றி சமூக ஊடக கணக்கு உதவி மையத்திற்கு தெரிவிக்கவும்.

நாம் எப்போது இறப்போம் என்பதை கணிக்கும் AI Death Calculator!!!

பதிவேற்றிய படங்களை எவ்வாறு அகற்றுவது?

மேலே கொடுக்கப்பட்டுள்ள சேவைகள் நேரம் எடுத்துக்கொண்டால் நீங்கள் இந்த முறைகளை பயன்படுத்தலாம்.

  • 1930 என்ற Cyber Crime நம்பருக்கு கால் செய்து உங்களது புகாரை தெரிவிக்கலாம்.
  • ஒரு வேல, அதுக்குள்ள அவங்க உங்க Photos/ Videos-அ Social Media-ல upload பண்ணிடங்கான, உடனே stopncii.org என்ற தளத்திற்கு சென்று அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.
  • உடனே உங்க Photos/ Videos எதுலலாம் upload ஆகிருக்கோ அதெல்லாம் remove பண்ணிடுவாங்க.

StopNCII என்றால் என்ன? இவங்க என்ன பண்ணுவாங்க 

AI Deep Fake

StopNCII- Stop Non-Consensual Intimate Image Abuse, StopNCII.org எனப்படும் இலவச ஆதாரம், ஒருமித்த அந்தரங்கப் படங்களால் (NCIIs) தவறாகப் பயன்படுத்தப்பட்டவர்களுக்கு உதவ உருவாக்கப்பட்டது. நிரல் செயல்படும் விதம் உங்கள் தனிப்பட்ட புகைப்படம்(கள்) அல்லது வீடியோ(களை) பயன்படுத்தி ஹாஷை உருவாக்குவதாகும்.

இந்த தளத்தை பயன்படுத்தி நம்முடைய Photos/ Videos morphing செய்து upload செய்யப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றிவிடமுடியும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement