நாளைக்கே சூரியன் இல்லாமல் மறைந்து போயிட்டுனா பூமியின் நிலைமை என்ன ஆகும் தெரியுமா..?

Advertisement

What Would Happen to Earth if the Sun Suddenly Disappears in Tamil

நம்மில் பலருக்கும் தினமும் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதனால் அனைத்தையும் தேடி தேடி அறிந்து கொள்வோம். அதிலும் குறிப்பாக ஒரு சிலருக்கு விண்வெளி பற்றிய தகவலை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் இருக்கும். அதனால் அப்படிப்பட்ட தகவல்களையும் நாம் நமது விருப்பத்துடன் தேடி தேடி தெரிந்து கொள்வோம்.

இப்படி விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் விருப்பம் உள்ள அனைவருக்குமே ஒரு பொதுவான கேள்வி இருக்கும். அதாவது இந்த பால்வெளி அண்டமே இயல்பாக இயங்கி கொண்டிருப்பதற்கு மிகவும் முக்கியமாக இருப்பது சூரியன் அப்படிப்பட்ட சூரியன் திடிரென்று இல்லாமல் மறைந்துவிட்டது என்றால் நமது பூமியின் நிலைமை என்ன ஆகும் என்பது தான் அந்த கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை இங்கு விரிவாக காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

சூரியன் இல்லாமல் போய்விட்டால் என்ன நடக்கும்:

Sun

இந்த உலகம் சீராக இயங்கி கொண்டிருப்பதற்கு மிகவும் முக்கியமான கரணம் என்றால் அது சூரியன் தான். அப்படிப்பட்ட சூரியன் ஒரு நாளைக்கு திடீரென்று இல்லாமல் மறைந்துவிட்டது என்றால் நமது பூமியின் நிலைமை என்ன ஆகும் என்பதை பற்றி இங்கு விரிவாக காணலாம் வாங்க.

பொதுவாக சூரியனின் ஒளி பூமியை வந்து சேர்வதற்கு 8 நிமிடம் 20 வினாடிகள் ஆகும் என்பதால் சூரியன் மறைந்துவிட்டது என்பதே நமக்கு 8 நிமிடம் 20 வினாடிகளுக்கு பிறகு தான் தெரிய வரும்.

அதேபோல் ஒளியும் ஈர்ப்புவிசையும் ஒரு முறையில் தான் செய்யலப்படும் என்பதால் அதே 8 நிமிடம் 20 வினாடிகளுக்கு நமது பூமியானது அதன் சுற்றுவட்டப்பாதையில் சரியாக இயங்கி கொண்டிருக்கும். அதன் பிறகு தான் பூமி மற்றும் மற்ற கோள்கள் நேர்கோட்டில் இயங்க தொடங்கும்.

சூரியன் இல்லாத இந்த இருள்சுழந்த உலகத்தில் மனிதர்கள் உணவினை சேமித்து வைத்திருந்தார்கள் என்றால் தோராயமாக 1 ஆண்டு வரை உயிர்வாழ முடியும். மேலும் நாம் உயிர்வாழ தேவைப்படும் ஆக்ஸிஜன் நமது சுற்றுசூழலிலேயே இருக்கும்.

மனிதர்கள் உயிர்வாழ உணவுக்கு பிறகு மிகவும் முக்கியமாக தேவைப்படுவது வெப்பநிலை சூரியன் மறைந்த பிறகு நமது பூமியானது முழுவதுமாக பனிக்கட்டியாக மாறிவிடும். அப்பொழுது மனிதர்களால் உயிர்வாழ முடியாது.

ஆனால் ஆழ்கடலில் உள்ள உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு சிறிதளவு வாய்ப்புள்ளது. மேலே கூறிய அனைத்தும் நமது பூமியானது எந்தவொரு கோள்களின் மோதாமல் இருக்கின்ற வரை மட்டுமே நடக்கும்.

முழு பிரபஞ்சத்திலும் மொத்தம் எத்தனை கிரகங்கள் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link

 

Advertisement