மார்ச் 15 என்ன தினம் தெரியுமா.?

Advertisement

Which Day is March 15

மனிதர்களின் வாழ்க்கையில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. அதில் பிறந்த நாள், கல்யாண நாள் போன்றவை நம்மால் உருவாக்கப்பட்டவை அதனால் அவை எப்போது வருகின்றது என்று தெரியும். அதனால் இதனை கொண்டாடுவோம். ஆனால் இவை மட்டுமில்லாமல் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் போன்ற மதங்களில் ஒவ்வொரு பண்டிகை வருகின்றது.

இதுமட்டுமில்லாமல் இரத்த தான தினம், குழந்தைகள் தினம், ஆசிரியர் தினம் போன்ற தினங்களும் வரும். இவையெல்லாம் பிரபலமானது அதனால் எல்லாருக்கும் தெரிகின்றது. ஆனால், நாட்களில் ஒவ்வொரு நாட்களுமே ஒவ்வொரு தினம் இருக்கின்றது. அதனை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் மார்ச் 15 என்ன தினம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

நுகர்வோர் என்றால் யார்?

நுகர்வோர் என்பவர் தனது தேவைக்காக எந்த ஒரு பொருளையும்  அல்லது சேவையை பெறும் ஒரு நபர் ஆவார்.

எடுத்துக்காட்டு:

தந்தை மகனுக்கு புது டிரஸ்ட்ரெஸ் எடுத்துக்கோ என்று பணம் கொடுக்கிறார்,இந்த பணத்தை பெற்று ஆதாயத்தை யார் பெறுகிறார்களோ அவர்களே நுகர்வோர் என்றழைக்கப்படுகிறார்.

உலக நுகவோர் தினம் எப்போது:

உலக நுகர்வோர் தினம் எப்போது

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15-ம் தேதி உலக நுகர்வோர் தினம் கொண்டாடப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், நுகர்வோர்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வருடந்தோறும் மார்ச் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

உலக நுகவோர் தின வரலாறு:

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன். எப். கென்னடி, அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாகவும், நுகர்வோர் உரிமைகள் சட்டம் தொடர்பாகவும் ஆற்றிய முக்கிய உரை 1962 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது.

அவ்வுரையே உலக அளவில் ஒரு நாட்டுத் தலைவர் நுகர்வோர் பாதுகாப்புத் தொடர்பாக ஆற்றிய முக்கிய உரையாகக் இருக்கிறது. 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி இடம்பெற்றது. அதன் விளைவாக 1962 ஆம் ஆண்டு, ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக பிரகடனப்படுத்தி அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 1963 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் நாள் ஆக கொண்டாடப்படுகிறது.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement