நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்

Advertisement

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றிய தகவல்

வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம்.காமில் எல்லோருக்கும் பயனுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அது என்ன தகவல் என்று தானே யோசிக்கிறீர்கள். வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் அது என்ன தகவல் என்பதை படித்து தெரிந்துகொள்வோம். நண்பர்களே இன்று நம் பதிவில் “நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்” பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வோம். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்பது என்ன என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது எதற்காக கொண்டுவரப்பட்டது, எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது என பல கேள்விகள் இருக்கும். அதற்கான பதிலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்துகொள்வோம்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000

What is Consumer in Tamil:

Consumer Protection

பொருட்களையும் சேவைகளையும் கொள்முதல் செய்து பயன்படுத்துபவர்களை “நுகர்வோர்” என்று கூறுகின்றனர். அதாவது எந்தவொரு பொருளை வாங்கினாலும் அவர் நுகர்வோர் ஆவார். (எடுத்துக்காட்டாக, நாம் ஒரு குளிர்பானம் வாங்கினோம் என்றால் நாம் நுகர்வோர் ஆவோம்).  

ஒருவர் பொருட்களையும் சேவைகளையும் பயன்படுத்தும் போது அல்லது அந்த பொருட்களின் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதனை கேட்க பயன்படுத்தும் உரிமைதான் “நுகர்வோர் உரிமைகள்” என்று கூறுகின்றனர். காலத்திற்குக் காலம் பல்வேறுபட்ட முறைகளில் நுகர்வோர் உரிமைகள் வகைப்படுத்தி கூறப்படுகின்றன.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்:

Consumer Protection Act

இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என்பது இந்தியாவில் வாழும் “மக்களின் நுகர்வுத் தன்மையை பாதுகாப்பதற்காக” இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட  சட்டமாகும். இந்த சட்டம் டிசம்பர் 1986, 1987 முதல் இந்தியாவில் அமலுக்கு வந்தது. இந்த சட்டமானது 1991 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506 2 யின் விளக்கம்

 

மேலும், இதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் அதன் செயற்பாடுகளும் முக்கியத்துவங்களும் அதிகரிக்கப்படும் என்ற நோக்கத்தில் டிசம்பர் 2002-ல் புதிய திருத்தச் சட்டங்களாக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, 2003 மார்ச் 15 அன்று புதிய பரிமாணங்களுடன் அமலுக்கு வந்தது. இதுபோல் அறிமுகப்படுத்தப்பட்ட விதிகளை “நுகர்வோர் பாதுகாப்பு விதிகள்” என்று அழைக்கப்படுகின்றன.

Consumer Court In Tamil:

நுகர்வோர் பாதுகாப்பு சட்டமென்பது நுகர்வோர் பிரச்சனைகள், சேவை குறைபாடுகள், வணிக நடைமுறைகள் மற்றும் நேர்மையற்ற வணிக முறைகள் போன்றவற்றிற்கு தீர்வு தரும் சட்டமாக உள்ளது. இந்த சட்டத்தில் நுகர்வோர் நீதிமன்றங்கள் மூலம் பாதிக்கப்பட்ட அதாவது புகாரதாரர்  புகார் தாக்கல் செய்து அவருக்கு அவரே வாதிட்டு நீதி பெற முடியும்.

  • நாம் வாங்கி பயன்படுத்தும் பொருட்கள் தரத்தில் உள்ள குறைபாடுகள், மருத்துவ குறைபாடுகள், வீடு கட்டிக் கொடுப்பவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வங்கிகள் போன்றவற்றை உள்ளடக்கிய பிரச்சனைகளுக்கு நீதி கேட்டு நுகர்வோர் நீதி மன்றத்தை அணுகலாம்.
  • நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் குறைதீர் ஆணையம் நிறுவப்பட்டும் செயல்பட்டும் வருகிறது.
  • நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் 90% புகார்கள் தீர்வு காணப்பட்டுள்ளது.
  •  நுகர்வோர் பெறும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது புகார்கள் இருந்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைதீர் ஆணையம் மூலம் இழப்பீடு பெறமுடியும்.
  • மேலும், எம்.ஆர்.பி குறிப்பிடாமல் பொருட்களை விற்பது, எம்.ஆர்.பி-க்கு அதிகமாக பொருட்களை விற்பது, சேவைகள் மற்றும் காப்பீடு நிறுவனத்தில் சரியாக காப்பீடுகள் வழங்காமல் இருப்பது, தனியார் மருத்துவ சேவைகளில் ஏற்படும் குறைகள், வங்கி பரிவர்த்தனைகளில் ஏற்படும் புகார்கள் போன்றவற்றிக்கு குறைதீர் ஆணையம் மூலம் நிவாரணம் பெறமுடியும்.
தகவல் அறியும் உரிமை சட்டம்

 

நுகர்வோருக்கான 6 உரிமைகள் என்ன:

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நுகர்வோருக்கு ஆறு உரிமைகளை வழங்கியுள்ளது.

  • தேவையான பொருட்களை தேர்வு செய்யும் முறை
  • அனைத்து வகையான பாதிக்கப்பட்ட அல்லது அபாயகரமான பொருட்களிலிருந்தும் தம்மை பாதுகாத்துகொள்ளும் உரிமை.
  • அனைத்து வகையான பொருட்களின் தரம் மற்றும் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்வதற்கான உரிமை.
  • நுகர்வோர் நலன்கள் பற்றி அனைத்து முடிவெடுக்கும் நடைமுறைகளிலும் கேட்கப்படும் உரிமை.
  • நுகர்வோர் உரிமைகள் மீறப்படும் போது அதற்கான தீர்வை பெறும் உரிமை.
  • நுகர்வோர் கல்வியை நிறைவு செய்வதற்கான உரிமை.
போக்சோ சட்டம் என்றால் என்ன

 

நுகர்வோர் நீதிமன்ற விதிகள்:

  • இந்த சட்டத்தின் மூலம் ஒரு குறை எழுந்து 2 ஆண்டுகள் வரை புகார்கள் பதிவு செய்யலாம். 2 ஆண்டுகளுக்கு மேலான புகார்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளபடாது.
  • நீதிமன்றத்தில் புகார் பதிவு செய்வதற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் தங்களுடைய குறைகளையும் அதற்கு அவர்கள் கோரும் தீர்வுகளையும் சரியாக விவரித்து நோட்டீஸ் அனுப்பவேண்டும். இதுபோன்று செய்வதன் மூலம் நுகர்வோர் நீதி மன்றத்திற்கு செல்ல தேவையில்லை. இது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு பெறுவதற்கான முயற்சி ஆகும்.
  • நீங்கள் அனுப்பிய நோடீஸ்க்கு பதில் வரவில்லை என்றால் நுகர்வோர் சட்டத்தின் கீழ் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் போதிய ஆதாரங்களுடன் புகார் பதிவு செய்யலாம்.
  • நீங்கள் ரூ.1 கோடி வரை இழப்பீடு கோரும் புகார்களை மாவட்ட குறைதீர் ஆணையத்தில் போதிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும். ரூ.1 கோடியிலிருந்து 10 கோடி வரை இழப்பீடு உள்ள புகார்களை மாநில நுகர்வோர் ஆணையத்தில் பதிவு செய்யவேண்டும்.
  • தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ரூ.10 கோடிக்கும் மேல் இழப்பீடுகள் கோரும் புகார்களை பதிவு செய்யவேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com 
Advertisement