என்னது இந்த மரம் நடக்குமா.?

Advertisement

நடக்கும் மரம் (Walking Tree)

மரம் என்றாலே ஒரு இடத்தில் தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால், இவ்வுலகில் நடக்கும் மரம் என்று உள்ளது. கேட்கவே வியப்பாக உள்ளது அல்லவா.! இந்நேரம் நம் நினைவிற்கு வருவது மரம் நடக்கிறது என்றால் அதில் பேய் இருக்கிறது என்று தான். ஆனால், அப்படி இல்லை, உண்மையாகவே இவ்வுலகில் உள்ள மர வகைகளில் ஒரு வகை மரம் மட்டும் நடக்குமாம்.

பொதுவாக, ஒரு இடத்தில் ஒரு மர கன்றை ஊன்றினால் அது வளர்ந்தும் அதே இடத்தில தான் இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் மரம் நடந்து செல்லும் என்று கூறினால் நம்ப முடியுமா.? அப்படி கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால், உண்மையாகவே நடக்கும் மரம் ஒன்று உள்ளது. இந்த மரம் எப்படி நடக்கிறது.? என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.

Do You Know About the Walking Tree.?

தென்னாப்பிரிக்காவில் உள்ள மழைக்காடுகளுக்கு சொந்தமான பனை மரம், நடக்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மரம் ஆனது, நிழலில் இருந்து சூரிய ஒளி இருக்கும் இடத்திற்கு தன் வேர்களை வளர்த்து கொண்டு செல்லுமாம். அதில் உள்ள பழைய வேர்கள் இறந்து விடுகிறது.

நடக்கும் மரம்

இவ்வாறு, இந்த மரம் சூரிய ஒளி படும் இடத்திற்கு வேர்களை வளர்த்து செல்வதால் நடக்கும் பனை மரம் என அழைக்கப்படுகிறது. இந்த நடக்கும் மரம் பனை மரம் வகையை சார்ந்தது. இந்த நடக்கும் பனை மரத்தின் அறிவியல் பெயர் Socratea Exorrhizza என்பதாகும்.

இம்மரத்திற்கு போதிய அளவில் சூரிய ஒளி கிடைக்காதபோது, இதன் வேர்கள் சூரிய ஒளி இருக்கும் இடத்தினை நோக்கி வளர்ந்து செல்லும். புதிய வேர்கள் உருவானதும் அதில் உள்ள பழைய வேர்கள் அழிய தொடங்கிவிடும். இதனால், மரமும் சற்று நகர்ந்து இருக்கும். இம்மரத்தை பற்றி ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

Walking Tree

இந்த நடக்கும் பனை மரம் ஆனது, ஒரு நாளைக்கு 2 செ.மீ முதல் 3 செ.மீ வரை நகர்கிறதாம். அதுவே, ஒரு வருடத்திற்கு சுமார் 20 மீட்டர் வரை நகர்ந்து இருக்கும். இந்த நகர்வினை ஒரு நாள், ஒரு வாரம் போன்ற கால இடைவெளியில் பார்த்தால் தெரியாது, 8 மாதம் அல்லது 1 வருடம் கழித்து பார்த்தால் மரம் ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து 20 மீட்டர் வரை நகர்ந்து இருப்பது தெரியும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Useful Information in Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link
Advertisement