விண்வெளியில் மனிதர்கள் என்ன சாப்பிடுவார்கள் எப்படி சாப்பிடுவார்கள் தெரியுமா?

what do humans eat in space in tamil

விண்வெளியில் என்ன சாப்பிடுவார்கள்

நண்பர்களே வணக்கம் இன்றைய பயனுள்ள தகவலில் விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் என்ன சாப்பிடுவார்கள் தெரியுமா? பொதுவாக மனிதர்கள் அனைத்து விதமான உணவுகளை சாப்பிடுவார்கள்..! ஆனால் விண்வெளிக்கு செல்வது என்பது அனைவராலும் முடியாது. சிலர் அங்கு சென்று வந்துள்ளார்கள். அங்கு செல்வதற்கு எவ்வளவு நாட்கள் எடுக்கும் அத்தனையும் தாண்டி அங்கு சென்று வாழ்ந்தவர்கள் உள்ளார்கள். அங்கு இருக்கும் போது அவர்கள் என்ன சாப்பிடுவார்கள். அங்கு சாப்பிடும் உணவுகளுக்கு ருசி இருக்குமாம் இதை பற்றிய தகவல் தான் இதுவாங்க தெரிந்துகொள்வோம்..!

What Do Humans Eat in Space in Tamil:

விண்வெளிக்கு செல்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. அதேபோல் விண்வெளி புவிஈர்ப்பு இல்லாத பகுதி அங்கே பூமியில் சாப்பிடும் உணவுகளை அப்படியே எடுத்து செல்ல முடியாது காரணம் விண்கலத்தில் சிதறும் உணவுகள் கிழே விழுகாது அந்தரத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்கும்.

இப்படி சுற்றிக்கொண்டு இருக்கும் உணவு துகள்கள் விண்கலத்தில் சிக்கி அதனால் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவ்வளவு ஏன் பெரும் விபத்தை கூட ஏற்படுத்தலாம். இது விண்வெளி வீரர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.

மேலும் விண்வெளி வீரர்களுக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. விண்வெளி வீரர்களின் உடல் 0 நிறை O மார்ஸை கொண்டுள்ளதால் அவர்களின் உடல் 100 சதவீத ஓய்வே இல்லை இதனால் ஒரு நாளுக்கு வீரருக்கு 3000 கலோரி ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.

அதேபோல் தான் தண்ணீரை அவ்வளவு சுலபமாக குடிக்க முடியாது பாட்டிலை திறந்தால் அது வெளியே வந்துவிடும். இதனால் விண்வெளி வீரர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதேபோல் அங்கு மாத்திரை வடிவில் தான் உணவுகளை உண்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த ஆய்வில் உணவுகளை சில வடிவத்தில் பாக்கெட் செய்து அனுப்புவதன் மூலம் வீர்ர்கள் அதனை உண்ண முடியும். அதனால் 1960 ஆம் ஆண்டு மேற்கூறியில் பயணித்த விண்வெளி வீரர்கள் அவர்களுக்கு என்று தயாரித்த உணவுகளை கொண்டு சென்றால்கள். அது கூம்பு நிலையில் தான் இருந்தது.

அதேபோல் நாம் பயன்படுத்தும் பேஸ்ட் பாக்கெட் போல் செய்து தான் உணவுகளை உட்கொள்ள முடிந்தது. அதனை வீரர்கள் வேண்டாவெறுப்பாக சாப்பிட்டார்கள்.

இந்த பாக்கெட் மூலம் சாப்பிடும் பொருட்கள் அதிலிருந்து தண்ணீர் வெளியாகி உறைந்து விடும். சாப்பிட முடியாத அளவுக்கு இருக்கும்.

தற்போது பூமியில் உண்ணும் உணவுக்கும் விண்வெளியில் உண்ணும் உணவுக்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. நாம் உணவுகளை பொதி செய்யும் முறையில் தான் உள்ளது. அதாவது பாக்கெட் செய்யும் முறையில் தான் உள்ளது.

இந்த உணவு பொருட்கள் அனைத்துமே கெட்டுவிடாமல் இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்பு இருந்தது போல் இப்போது இல்லை இந்த உணவுகள் அனைத்தையும் காற்று அடைத்த அறையில் தான் வைக்கபட்டு இருக்கும்.

இந்த அறைக்குள் விண்வெளி ஆடை இல்லாமலேயே பறந்து செல்ல முடியும். அதேபோல் இந்த அறையில் சாப்பிடும் போது கவனமாக சாப்பிடு வேண்டும். ஏனென்றால் இந்த உணவுகள் அனைத்தும் பாக்கெட் செய்து இருக்கும்பட்சத்தில் பிரிக்கும் போது அது சிதறி விண்கலத்தில் சிக்கி பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

விண்வெளிக்கு உணவுகளை எடுத்து செல்வது என்றால் அதனை உறைய வைத்து அல்லது பவுடராக மாற்றி தான் உண்கின்றனர்.

விண்வெளி செல்லும் 2 நாட்களுக்கு முன் உணவுகளை விண்கலத்திற்குள் அனுப்பப்படும். மனிதனுக்கு உணவுகளின் அளவு 1.7 Kg என அளவிட்டு விண்கலத்திற்குள் அனுப்பப்படுகிறது. உணவுகளின் ஊட்டச்சத்துக்களை விட உணவுகளின் காலோரிகளை மட்டுமே கருதப்படுகிறது.

இன்றைய காலத்தில் விண்வெளிக்கு எடுத்து செல்லும் பொருட்களில் இந்தியன் மீன் கறி, நண்டு கேக், சாக்லேட் புட்டிங் கேக், எலுமிச்சை தயிர் கேக் போன்றவற்றுடன் விண்வெளி வீரர்களுக்கு பிறந்த நாள் கேக் கூட அனுப்பப்பட்டுள்ளது என்றால் ஆச்சிரியமாக உள்ளது. இந்த அனைத்து உணவுகளிலும் கலோரிகளின் அளவை கணக்கிடப்பட்டு அனுப்படுகிறது.

நெடுஞ்சாலையில் சிவப்பு அரளி செடிகளை மட்டும் வளர்ப்பது ஏன் தெரியுமா?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil