போஸ்ட் ஆபிஸின் முக்கியமான சேமிப்பு திட்டங்களும், அதன் வட்டிகள் பற்றி தெரியுமா.?

Best Post Office Investment Scheme in tamil

Best Post Office Investment Scheme

தபால் துறையில் நிறைய வகையான திட்டங்கள் உள்ளது. அதில் எந்த திட்டத்தில் சேமிப்பது, எந்த திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கிறது என்ற பல கேள்விகள் இருக்கும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லும் பதிவாக இருக்கும். சரி வாங்க தபால் துறையின் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

Post office savings account:

இந்த திட்டத்திற்கு குறைந்தபட்சமாக 500 ரூபாய் தொகையில் ஆரம்பித்தால் போதுமானது. இதை single account ஆகவும் ஓபன் செய்யலாம். ஜாயிண்ட் account ஆகவும் ஓபன் செய்யலாம். இந்த திட்டத்திற்கு 4% வட்டி கொடுக்கப்படுகிறது. மேலும் இந்த சேமிப்பு திட்டத்தில் Net banking / Mobile Banking வசதிகளும் உள்ளது.

Recuurring Deposit( RD):

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 100 ரூபாய் செலுத்தி 5 வருடத்தில் கணக்கு முடிக்கப்படுகிறது. இதற்கு 5.8% வட்டி அளிக்கப்படுகிறது.  மேலும் ஒரு வருடத்திற்கு சரியாக கணக்கை கட்டினால் 50% வரைக்கும் LOAN அளிக்கப்படும்.

Post office time deposit account Td:

இந்த திட்டத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் தொகை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம், ஐந்து வருடம், என்று சென்டர் செய்து கொள்ளலாம்.

Post Office Monthly Income Scheme:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் தொகையாக 1000 ரூபாயும், அதிகபட்சம் 4.9 லட்சம் வரைக்கும் டெபாசிட் செய்யலாம். இதற்கு 6.6% வட்டி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு 5 வருடமாகும்.

Lump Sum என்றால் என்ன..? இதில் எப்படி முதலீடு செய்வது..!

 Senior Citizen Savings Scheme:

55 வயது முதல் 60 வயது வரைக்கும் உள்ளவர்கள் இந்த திட்டத்தை துவங்கலாம். இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாயாகவும், அதிகபட்சம் 15 லட்சம் வரைக்கும் செலுத்தலாம். 7.4 % வட்டி அளிக்கப்படுகிறது.

Public Provident Fund:

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாயாகவும், அதிகபட்சம் 1.5 லட்சம் வரைக்கும் செலுத்தலாம். இதற்கு 7.1% வட்டி அளிக்கப்படுகிறது.

National Savings Certificate:

இதற்கு 6.8 % வட்டி அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 1000 ரூபையாகவும் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம்.

 Kisan Vikas Patra:

இந்த திட்டத்தில் 124 மாதம் வரை பணத்தை சேமித்தால் உங்களின் சேமிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும். 6.9% வட்டி அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 1000 ரூபாய் செலுத்த வேண்டும்.

Sukanya Samriddhi Accounts:

இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்காக இருக்கிறது. பெண் குழந்தைக்ளுக்கு 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்ளுக்கு இந்த சேமிப்பு திட்டத்தை தொடங்குங்கள். இதற்கு 7.6% வட்டி அளிக்கப்படுகிறது. வருடத்திற்கு குறைந்தபட்சம் 250 ரூபையாகவும், அதிகபட்சம் 1.50 லட்சம் வரை செலுத்தலாம்.

PPF என்றால் என்ன..? இதில் முதலீடு செய்யலாமா..?

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு