Lump Sum Investment in Tamil
இன்றைய பதிவில் Lump Sum என்றால் என்ன..? இதில் எப்படி முதலீடு செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த காலகட்டத்தில் பலரும் முதலீடு செய்வதற்கு முன் வருகிறார்கள். நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைப்பதை விட அதை ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதால் நமக்கு லாபம் கிடைக்கும் என்பது தான் இதற்கு காரணமாக இருக்கிறது.
இருந்தாலும் பணத்தை முதலீடு செய்வதற்கு பலரும் முன் வந்தாலும் சிலருக்கு அதன் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவின் வாயிலாக தினமும் ஒரு முதலீட்டு திட்டத்தை பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
SIP vs Lump Sum எது முதலீடு செய்ய சிறந்தது? |
Lump Sum என்றால் என்ன..?
Lump Sum என்பது ஒரு பெரிய தொகையை ஒரே ஒரு முறை மட்டும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்து பிறகு அதன் மூலம் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் ஒரு திட்டமாகும்.Lump Sum முதலீடு என்பது ஒரு தனிநபர் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரே நேரத்தில் பணத்தை முதலீடு செய்யும் சூழ்நிலையைக் குறிக்கிறது. இதில் பலமுறை டெபாசிட் நடைபெறுவதில்லை.
SIP முதலீட்டு முறைக்கு மாறாக, தனிநபர்கள் சிறிய தொகையை மொத்த தொகை (Lump Sum) முறையில் டெபாசிட் செய்கிறார்கள். அதாவது உங்களிடம் ஒரு பெரிய தொகை இருந்தால் அதை மொத்தமாக இதில் முதலீடு செய்யலாம்.
இந்த திட்டத்தில் நீங்கள் சரியான நேரத்தில் முதலீடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, மார்க்கெட் இப்பொழுது இறங்கியுள்ளது என்றால் அந்த நேரத்தில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். பிறகு மார்க்கெட் உயர தொடங்கினால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
PPF என்றால் என்ன..? இதில் முதலீடு செய்யலாமா..? |
இந்த Lump Sum முதலீட்டு திட்டத்தில் நீங்கள் குறைந்தது 5 வருடம் வரை முதலீடு செய்ய வேண்டும். அப்பொழுது தான் நல்ல வருமானத்தை நீங்கள் பெறமுடியும்.
Lump Sum முதலீடு மூலம், உங்கள் பணம் அனைத்தும் முதல் நாளிலேயே உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் Lump Sum முறையில் முதலீடு செய்வதற்கு முன், தனிநபர்கள் AUM, முதலீட்டுத் தொகை மற்றும் பல்வேறு வகையான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதுபோல நீங்கள் எந்த திட்டத்தில் முதலீடு செய்தாலும், முதலில் அந்த திட்டத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொண்ட பின் முதலீடு செய்வது சிறந்தது.
Mutual Funds vs Stocks இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |