இந்திய அரசால் வழங்கப்படும் 6 அதிக வருமானம் தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்..!

Advertisement

சிறந்த 6 சிறு சேமிப்பு திட்டங்கள்..! Best Post Office Saving Schemes in Tamil

மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அரசு பலவகையான சேமிப்பு திட்டங்களை அறிவிக்காது. அவற்றில் மக்களிடையே பிரபலமாக இருப்பது அஞ்சலக சேமிப்பு திட்டம் தான். இந்த திட்டங்கள் முன்பு இந்தியாவில் உள்ள தபால் நிலையங்களால் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் இப்போது இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்களை வழங்க சில தனியார் மற்றும் பொது வங்கிகளுக்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த சேமிப்பு திட்டங்களில் அதிக லாபம் தரும் சேமிப்பு திட்டங்களை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

தபால் அலுவலக மாத வருமானத் திட்டம் – National Savings Monthly Income Account (MIS):

தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தின் படி, ஒருவர் ரூ.50,000 ஒரு முறை டெபாசிட் செய்தால், அவருக்கு மாதம் ரூ.275 அல்லது 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.3,300 கிடைக்கும். அதாவது ஐந்தாண்டுகளில் மொத்தம் ரூ.16,500 வட்டியாக கிடைக்கும். அதேபோல, ஒருவர் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூ.550, ஆண்டுக்கு ரூ.6600, ஐந்தாண்டுகளில் ரூ.33,000 கிடைக்கும். ஐந்தாண்டுகளில் மாதம் ரூ.4.5 லட்சத்திற்கு ரூ.2475, ஆண்டுக்கு ரூ.29,700 மற்றும் வட்டி வழியில் ரூ.1,48,500 கிடைக்கும்.

தனிநபர் கணக்கைத் திறக்கும்போது இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இருப்பினும், கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் – Senior Citizens Savings Scheme Account (SCSS)

இந்த திட்டம் இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்காக சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் 7.4% வட்டி வழங்கப்படுகிறது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் இணைத்து கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். அடுப்பில் திட்டத்தில் அதிகபட்ச தொகை ரூபாய் 15 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். நீங்கள் இந்த திட்டத்தில் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 வருமானம் அதிகரித்தாலும் சேமிப்பு இல்லையே ஏன்? நாம் செய்கின்ற தவறு என்ன தெரியுமா?

கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டம் – Kisan Vikas Patra (KVP):

அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் ஒன்றான இந்த கிசான் விகாஸ் பத்ரா நீண்ட கால சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய மக்களுக்கு உதவுகிறது. குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூபாய் 1000 இலிருந்து தொடங்குகிறது, அதிகபட்ச வரம்பு இல்லை. தற்போது வழங்கப்படும் வட்டி விகிதங்கள் ஆண்டுதோறும் 6.9 சதவீதம் கூட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லை.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் – Sukanya Samriddhi Account (SSA)​:

இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் சிறந்த சேமிப்பு திட்டம் என்று சொல்லலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையாக 250 மற்றும் அதிகபட்சம் ரூபாய் 1.5 லட்சம் வருடத்திற்கு. இத்திட்டம் திறக்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகள் செயல்படும். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின்  தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.6 சதவீதம் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 செல்வமகள் சேமிப்பு திட்டம் விதிமுறை..!

பொது வருங்கால வைப்பு நிதி – Public Provident Fund Account (PPF):

பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது மிக பிரபலமான அஞ்சலக திட்டங்களில் ஒன்றாகும். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதனை முதிர்வுக்கு பிறகும் 5 ஆண்டு தொகுப்புகளாக மீண்டும் தொடர்ந்து கொள்ளலாம். ஒரு நிதியாண்டில் ரூபாய் 1.5 லட்சம் வரையிலான பொது வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்புகள் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குகளுக்குத் தகுதியுடையவை.

தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் – National Savings Certificates (NSC):

இந்த சேமிப்பு திட்டம் இந்திய மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூபாய் 100 ரூபாய் மற்றும் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை. தற்போதைய வட்டி விகிதம் 6.8 சதவீதம் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ஒருவர் 1.5 லட்சம் வரி விலக்கு கோரலாம்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள சேமிப்பு திட்டங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉👉 Investments

 

Advertisement