Indian Bank Rd 3500 Per Month in Tamil
பொதுவாக நாம் அனைவருமே பணத்தை ஓடி ஓடி சம்பாதிக்கின்றோம். அப்படி நாம் சம்பாதிக்கின்ற பணத்தை சேமிப்பது ரொம்ப முக்கியமானது. நான் என்னுடைய சம்பள பணத்தை வங்கியில் தான் டெபாசிட் செய்து வைக்கிறேன் என்று சொல்ல கூடாது. இன்னும் சில பேர் ஏதவாது மொத்தமாக பணம் வந்தால் உடனே போய் நகையை எடுக்கின்றனர்.
இப்படி நீங்கள் செய்வதால் ஏதவாது புரோஜனம் இருக்கா என்று கேட்டால் இருக்கும் ஆனால் அந்த அளவிற்கு இல்லை. ஏனென்றால் நகையாக எடுத்தீர்கள் என்றால் அதனை பயன்டுத்தி பணம் தேவைப்படும் போது பணத்தை பெற்று கொள்ளலாம். மற்றபடி அதிலிருந்து நாம் எந்த ஒரு வருமானத்தையும் ஈட்ட முடியாது. அதனால் நீங்கள் முதலீடு செய்வது எதிர்காலத்தில் அதிலிருந்து ஒரு நல்ல தொகை வருவது போல் உள்ள திட்டங்களில் சேர வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் உள்ள rd திட்டத்தை பற்றி அறிந்து கொள்வோம்.
இந்தியன் வங்கியில் Rd திட்டத்தில் 3500 ரூபாய் சேமித்தால் எவ்வளவு கிடைக்கும்:
தகுதி:
18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் அடையலாம்.
டெபாசிட் தொகை:
இந்த திட்டத்தில் குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
டெபாசிட் காலம்:
இந்தியன் வங்கியில் Rd திட்டத்தில் 6 மாதம் முதல் 10 வருடம் வரை கால அளவு வழங்கப்படுகிறது.
வட்டி:
இந்த திட்டடத்தில் வட்டியானது 4% முதல் 5.75% வரை வழங்கப்படுகிறது.மேலும் இந்த வட்டி விகிதமானது நீங்கள் தேர்வு செய்யும் கால அளவை பொறுத்து மாறுபடும்.
கால அளவு | பொதுமக்களுக்கான வட்டி | மூத்த குடிமக்களுக்கான வட்டி |
180 நாட்கள் | 4.00% | 4.50% |
181 நாட்கள் – 269 நாட்கள் | 4.00% | 4.50% |
9 மாதங்கள் – 364 நாட்கள் | 4.40% | 4.90% |
1 ஆண்டு | 5.00% | 5.50% |
1 வருடம் 1 நாள் – 1 வருடம் 364 நாட்கள் | 4.95% | 5.45% |
2 ஆண்டுகள் – 2 ஆண்டுகள் 364 நாட்கள் | 5.10% | 5.60% |
3 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் | 5.25% | 5.75% |
5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:
சேமிப்பு தொகை | முதிர்வு காலம் | Normal citizens | Senior citizens | ||||
மொத்தமாக சேமித்த தொகை | வட்டி தொகை (5.25%) | மொத்த தொகை | மொத்தமாக சேமித்த தொகை | வட்டி தொகை ( 5.75%) | அசல் தொகை | ||
3500 ரூபாய் | 5 வருடம் | 2,10,000 ரூபாய் | 30,452 ரூபாய் | 2,40,452 ரூபாய் | 2,10,000 ரூபாய் | 33,622 ரூபாய் | 2,43,622 ரூபாய் |
10 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:
சேமிப்பு தொகை | முதிர்வு காலம் | Normal citizens | Senior citizens | ||||
மொத்தமாக சேமித்த தொகை | வட்டி தொகை (5.25%) | மொத்த தொகை | மொத்தமாக சேமித்த தொகை | வட்டி தொகை ( 5.75%) | அசல் தொகை | ||
3500 ரூபாய் | 10 வருடம் | 4,20,000 ரூபாய் | 1,32,544 ரூபாய் | 5,52,544 ரூபாய் | 4,20,000 ரூபாய் | 1,47,726 ரூபாய் | 5,67,726 ரூபாய் |
இந்தியன் வங்கியில் 5 வருடத்தில் 2,11,500 ரூபாய் பெற வேண்டுமா..?
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |