Indian Bank FD 1.5 Lakh Investment Plan
முதலீடு என்பது நம்முடைய வாழ்க்கையினை மகிழ்ச்சியான முறையிலும், யாரையும் எதிர்பார்க்காமலும் வாழ உதவுகிறது. இத்தகைய முறை ஆனது பலருக்கும் தெரிந்தும் கூட முதலீடு செய்யாமல் இருக்கிறார்கள். ஏனென்றால் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால் அதனை எப்படி செய்வது என்றும், குறிப்பிட்ட முதலீட்டிற்கு பிறகு நமக்கு கிடைக்கும் தொகை எவ்வளவு என இதுபோன்ற தகவல்கள் பலருக்கும் தெரியாமலே இருக்கிறது. அதனால் தான் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் உள்ள FD திட்டத்தில் 1,50,000 ரூபாயினை முதலீடு செய்வதன் மூலமாக எவ்வளவு ரூபாய் வரை வட்டி மற்றும் அசலாக பெறலாம் என்பதை தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இந்தியன் வங்கி பிக்சட் டெபாசிட்:
இந்தியன் வங்கியில் உள்ள பிக்ஸ்ட் டெபாசிட் திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் சேர்ந்து முதலீடு செய்யலாம்.
சேமிப்பு தொகை:
இந்த பிக்சட் டெபாசிட் திட்டத்தில் குறைந்தப்பட்ச சேமிப்பு தொகையாக 1000 ரூபாய் முதல் சேமிக்கலாம். மேலும் இதில் அதிகப்பட்ச சேமிப்பு தொகை என்பது வரம்பில் கிடையாது.
வட்டி விகிதம்%:
வட்டி விகிதத்தை பொறுத்தவரை பொதுமக்கள் மற்றும் சீனியர் சிட்டிசன் என இரண்டு மாதிரியாக வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. மேலும் உங்களது முதிர்வு காலத்தை பொருத்தும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
அதில் பொதுமக்களுக்கு 6.70% வரையிலும், சீனியர் சிட்டிசனிற்கு 7.20% வரையிலும் அளிக்கப்படுகிறது.
சேமிப்பு காலம்:
உங்களுக்கான சேமிப்பு காலமாக இதில் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலும் வழங்கப்படுகிறது. ஆகவே இந்த காலத்திலும் உங்களுக்கு விருப்பமான காலத்தினை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1.5 லட்சம் முதலீட்டிற்கு கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு..?
முழு விளக்கம்:
Indian Bank FD 1.5 Lakh Investment Plan | |||||
சேமிப்பு தொகை | சேமிப்பு காலம் | Normal Citizen | Senior Citizen | ||
வட்டி தொகை (6.25%) | அசல் தொகை | வட்டி தொகை (6.75%) | அசல் தொகை | ||
1,50,000 ரூபாய் | 5 வருடம் | 54,531 ரூபாய் | 2,04,531 ரூபாய் | 59,625 ரூபாய் | 2,09,625 ரூபாய் |
இந்தியன் வங்கியில் 700 ரூபாய் முதலீடு போட்டா மெச்சூரிட்டி தொகை எவ்வளவு
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |