Indian Bank RD 1000 Per Month 3 Years Investment Plan in Tamil
நாம் யாரையும் நம்பி வாழக்கூடாது என்பதற்கு தற்போதைய இந்த சூழல் ஆனது ஒரு எடுத்துக்காட்டாக அனைவருக்கும் இருக்கிறது. ஏனென்றால் பணம் மட்டுமே முக்கியமாக இருக்கும் இந்த காலத்தில் பிறரின் உதவியை நாடுவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதனால் நமக்கான பணத்தினை நாமே சேமித்து வைப்பது தான் நல்லது. இப்படிப்பட்ட நிலைக்கு என்று உள்ள ஒன்று தான் முதலீடு. ஏதோ நம்மால் முடிந்த தொகையை முதலீடு செய்து வைப்பதன் மூலம் பிற்காலத்தில் அது உதவும். ஆகவே நாம் எவ்வளவு பணம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி மற்றும் அசலாக பெறலாம் என்பதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ரெக்கரிங் டெபாசிட் திட்டம் மாதம் 1000:
தகுதி:
இந்த RD திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த சேரலாம். மேலும் இது இந்தியன் வங்கி திட்டமாகும்.
சேமிப்பு தொகை:
உங்களுக்கு இந்த திட்டத்தில் குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
வட்டி விகிதம்%:
வட்டி விகிதம்% என்பது 4% முதல் 5.75% வரை வட்டி விகிதம் அளிக்கப்பட்டாலும் கூட உங்களது சேமிப்பு காலத்தை பொறுத்தே வட்டி விகிதம் வரும்.
முதிர்வு காலம்:
மேலும் இந்த திட்டத்தில் உங்களுக்கான சேமிப்பு காலமாக 6 மாதம் முதல் 10 வருடம் வரை அளிக்கப்படுகிறது. இதில் உங்களுக்கான சேமிப்பு காலத்தை நீங்களே தேர்வு செய்யாலாம்.
RD திட்டத்தில் 1000 ரூபாய் சேமித்து வந்தால் 3 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:
எடுத்துக்காட்டாக:
சேமிப்பு தொகை | முதிர்வு காலம் | Normal Citizens | Senior citizens | ||||
மொத்த சேமிப்பு தொகை | வட்டி தொகை (5.25%) | அசல் தொகை | மொத்த சேமிப்பு தொகை | வட்டி தொகை (5.75%) | அசல் தொகை | ||
1000 ரூபாய் | 3 வருடம் | 36,000 ரூபாய் | 3,052 ரூபாய் | 39,052 ரூபாய் | 36,000 ரூபாய் | 3,361 ரூபாய் | 39,361 ரூபாய் |
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |