இந்தியன் வங்கியில் 2500 ரூபாய் முதலீடு போட்டா 5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்..

Advertisement

இந்தியன் வங்கி RD திட்டம் 

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாது, அதனால் நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைப்பதும் முக்கியமானது. ஆனால் பல பேருக்கு சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, ஆனால் எந்த திட்டத்தில் சேமிப்பது என்ற குழப்பம் தான் இருக்கிறது. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் சேமிப்பு திட்டங்களை பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்தியன் வங்கியில் உள்ள RD திட்டத்தில் 2500 ரூபாய் சேமித்து வந்தால் எவ்வளவு கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தகுதி:

18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம்.

டெபாசிட் தொகை: 

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச டெபாசிட் தொகையாக 100 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.

டெபாசிட் காலம்:

இந்தியன் வங்கி RD திட்டம் 

இந்தியன் வங்கியில் Rd திட்டத்தில் 6 மாதம் முதல் 10 வருடம் வரை கால அளவு  வழங்கப்படுகிறது.

தபால் துறையில் மாதம் 4000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்..?

வட்டி:

இந்த திட்டடத்தில் வட்டியானது 4% முதல் 5.75% வரை வழங்கப்படுகிறது.மேலும் இந்த வட்டி விகிதமானது நீங்க தேர்ந்தெடுக்கும் கால அளவை பொறுத்து மாறுபடும்.

கால அளவு  பொதுமக்களுக்கான வட்டி  மூத்த குடிமக்களுக்கான வட்டி 
180 நாட்கள் 4.00% 4.50%
181 நாட்கள் – 269 நாட்கள் 4.00% 4.50%
9 மாதங்கள் – 364 நாட்கள் 4.40% 4.90%
1 ஆண்டு 5.00% 5.50%
1 வருடம் 1 நாள் – 1 வருடம் 364 நாட்கள் 4.95% 5.45%
2 ஆண்டுகள் – 2 ஆண்டுகள் 364 நாட்கள் 5.10% 5.60%
3 ஆண்டுகள் – 10 ஆண்டுகள் 5.25% 5.75%

 

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 2500 ரூபாய் சேமித்து வந்தால் 5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:

சேமிப்பு தொகை முதிர்வு காலம் Normal Citizens                      Senior citizens
மொத்தமாக சேமித்த தொகை  வட்டி தொகை (5.25%)  மொத்த தொகை மொத்தமாக சேமித்த தொகை  வட்டி தொகை (5.25%)  மொத்த தொகை
2500 ரூபாய்  5 வருடம்  1,50,000 ரூபாய்  21,750 ரூபாய்  1,71,750 ரூபாய்  1,50,000 ரூபாய்  24,015 ரூபாய்  1,74,015 ரூபாய் 

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் 2500 ரூபாய் சேமித்து வந்தால் 10 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்:

சேமிப்பு தொகை முதிர்வு காலம் Normal Citizens                      Senior citizens
மொத்தமாக சேமித்த தொகை  வட்டி தொகை (5.25%)  மொத்த தொகை மொத்தமாக சேமித்த தொகை  வட்டி தொகை (5.25%)  மொத்த தொகை
2500 ரூபாய்  10 வருடம்  3,00,000 ரூபாய்  94,676 ரூபாய்  3,94,676 ரூபாய்  3,00,000 ரூபாய்  1,05,518 ரூபாய்  4,05,518 ரூபாய் 

 

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு

 

Advertisement