How To Minor Invest In Mutual Fund in Tamil
வணக்கம் அன்பான நேயர்களே..! மியூச்சுவல் ஃபண்ட் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். மியூச்சுவல் ஃபண்ட் ஒரு பாதுகாப்பான நிறுவனம் ஆகும். அதில் முதலீடு செய்வதால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் தெரியும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பல திட்டங்கள் இருக்கின்றன. மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் ஒவ்வொரு திட்டங்களில் முதலீடு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கிறது. இருந்தாலும் சில வகையான பண்ட்களில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள். அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவின் மூலம் 18 வயதுக்கு குறைவானவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா..? செய்ய கூடாதா..? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பணத்தை சேமிப்பது நல்லதா..? முதலீடு செய்வது நல்லதா..? |
18 வயதுக்கு குறைவானவர்கள் முதலீடு செய்யலாமா..?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு இன்று பலரும் முன் வருகின்றனர். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதால் நல்ல எதிர்காலம் உண்டு என்பதை நம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் சில மக்கள் தன் குழந்தைகள் பெயரிலும் முதலீடு செய்யலாமா என்று கேட்கின்றனர். 18 வயதுக்குக் குறைவான குழந்தைகள் அதாவது மைனர்கள் பெயரில் முதலீடு செய்ய முடியுமா என்ற கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
மியூச்சுவல் ஃபண்டில் யார் முதலீடு செய்ய வேண்டும்..?
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு 18 வயது பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். 18 வயதுக்கு மேலானவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் எந்த தயக்கமும் இல்லாமல் முதலீடு செய்யலாம்.
அதேபோல 18 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளின் பெயரிலும் பெற்றோர்கள் முதலீடு செய்யலாம்.
மைனர் பெயரில் முதலீடு செய்யலாமா..?
மியூச்சுவல் ஃபண்டில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெயரில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அவர்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலரின் உதவியுடன் முதலீடு செய்ய வேண்டும்.
குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம் போன்றவற்றை நினைவில் கொண்டு மியூச்சுவல் ஃபண்டில் மைனர்கள் பெயரில் பெற்றோர்களின் உதவியுடன் முதலீடு செய்யலாம். அதே நேரத்தில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு ஜாயிண்ட் கணக்கு (Joint Account ) அனுமதி இல்லை.
அதேபோல மியூச்சுவல் ஃபண்டில் 18 வயதுக்கு குறைவானவர்கள் முதலீடு செய்தால் அவருடைய உயர்கல்வி, திருமணம் போன்ற ஒன்றை இலக்காக கொண்டிருக்க வேண்டும்.
அதுபோல மைனர்கள் பெயரில் முதலீடு செய்ததை 18 வயது ஆன பின்னர் அந்த மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை மேஜர் கணக்காக ( Major Account ) மாற்ற வேண்டும்.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |