ஓவர்நைட் ஃபண்ட் என்பது என்ன..? அதில் முதலீடு செய்யலாமா..?

Advertisement

Overnight Funds Investment in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! நம் அனைவருக்குமே நாம் சேமித்து வைத்திருக்கும் பணத்தை பல மடங்கு பெருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பணத்தை சேமிப்பதை விட அதை முதலீடு செய்வது நல்ல பலன் அளிக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். மியூச்சுவல் ஃபண்ட் பற்றி உங்களுக்கு தெரியும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு பல திட்டங்கள் இருக்கின்றன. அப்படி முதலீடு செய்யும் திட்டங்களில் ஓன்று தான் ஓவர்நைட் ஃபண்ட். இந்த ஓவர்நைட் ஃபண்ட் பற்றிய தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்..!

Hybrid Fund -ல் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன..?

ஓவர்நைட் ஃபண்ட் என்றால் என்ன:

மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் திட்டங்களில் இதுவும் ஓன்று. ஓவர்நைட் ஃபண்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பாதுகாப்பான ஃபண்ட் என்று கூறப்படுகிறது. ஓவர்நைட் ஃபண்ட் என்பது ஒரு வகையான Open-Ended Dept வகை ஃபண்ட் என்று சொல்லப்படுகிறது.

இது மிகவும் பாதுகாப்பானது. ஓவர்நைட் ஃபண்ட் ஒரு சிறிய அளவில் வட்டி விகிதத்தை தரும் திட்டமாகும். இது ஒரு சிறிய காலத்திற்கு சிறிய வருமானத்துடன் கூடிய திட்டமாக செயல்படுகிறது.

நீங்கள் முதன் முதலில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய போகிறீர்கள் என்றால் முதலில் ஓவர்நைட் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் மற்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

இதனால் முதலீடு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். எனவே மற்ற திட்டங்களில் நீங்கள் தைரியமாக முதலீடு செய்யலாம்.

இந்த ஓவர்நைட் ஃபண்ட் அடுத்த நாளே முதிர்ச்சி அடையும் வகையில் செக்யூரிட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. அதாவது இந்த ஓவர்நைட் ஃபண்ட் ஒவ்வொரு நாளும் முதிர்ச்சி அடைகிறது.

ஓவர்நைட் ஃபண்டில் கிடைக்கும் வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும். வணிகம் செய்பவர்கள், புதிதாக தொழில் செய்பவர்கள் ஒரு சில நாட்களுக்கு மட்டும் பணத்தை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஓவர்நைட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

ஓவர்நைட் ஃபண்ட் நன்மைகள்:

பொதுவாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்த பணத்தை ஒரு வருடத்திற்கு முன்பே எடுத்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால் இந்த ஓவர்நைட் ஃபண்டில் முதலீடு செய்த பணத்தை அடுத்த நாளே எடுத்து கொள்ள முடியும்.

அதேபோல நீங்கள் ஓவர்நைட் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால் உங்கள் பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்து கொள்ள முடியும்.

ஃபண்ட் மேனேஜர்கள் நீங்கள் முதலீடு செய்த பணத்தை உங்களுக்கு எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் டெப்ட் ஃபண்டில் முதலீடு செய்வார்கள்.

இதனால் நீங்கள் முதலீடு செய்த பணத்தை உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் எடுத்து கொள்ள முடியும்.

மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் முதலீடு
Advertisement