உங்கள் கவலைகளை மறக்க சில கடி ஜோக் | Kadi Jokes Tamil With Answer

Advertisement

Kadi Jokes Tamil With Answer

ஜோக்ஸ் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பெரும்பாலும் படங்களில் இந்த ஜோக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த ஜோக் ஒருவரை சிரித்து மகிழ்ச்சியடைய செய்வதற்கு மிகவும் உதவுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஜோக்ஸ் என்பதை விரும்பி பார்த்தும், படித்தும் மகிழ்வார்கள். அந்த வகையில் இன்று உங்களை கவலைகளை மறக்க செய்வதற்கு சில கடி ஜோக்ஸை இந்த பதிவில் காணலாம். அதனை படித்து சிரித்து மகிழுங்கள். சரி வாங்க அந்த கடி ஜோக்ஸை இப்பொழுது பார்க்கலாம்.

கடி ஜோக்:

1. தங்க ஜெயின் உருகினால் தங்கம் வரும், வெள்ளி ஜெயின் உருகினால் வெள்ளி வரும், சைக்கிள் ஜெயின் உருகினால் சைக்கிள் வருமா?

2. ஹோட்டல்ல காசு இல்லைன்னு சொன்ன மாவட்ட சொல்லுவாங்க ஆனா Bus-ல காசு இல்லன்னு சொன்ன Bus ஓட்ட சொல்லுவாங்களா?

3.  ஆறும் ஆறும் சேர்ந்தால் எத்தனை வரும்.?

விடை: வெள்ளம் வரும்

4. முள் குத்தினால் ஏன் இரத்தம் வருது.?

விடை: யார்

5. Wife: எதுக்குங்க Spoon பாதியா உடைச்சீங்க.?

கணவர் கூடிய பதில்: Doctor தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிட சொன்னாரு

இதையும் கிளிக் செய்யுங்கள் 👇
உங்களை சிரிக்க வைப்பதற்கு சில ஜோக்ஸ்

6. கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான் அது என்ன காலம்.?

விடை: கொசுவே இல்லாத காலம்

7. Patient ஒருவர் Doctor-யிடம் இவ்ளோ மாத்திரைகளையும் இரண்டே நாளில் சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே ஏன்.?

விடை: ரெண்டு நாளுக்கு அப்பறம் Expiry Date முடிஞ்சிடும்.

8. ஆசிரியர்: ஏன்டா நாய் படம் வரஞ்சிட்டு வாய் மட்டும் வரையாமல் வச்சி இருக்க?

மாணவர் விடை: அது வாயில்லா பிராணி Sir

9. தானத்தில் பெரிய தானம் எது.?

விடை: மைதானம்

10. ஒரு நண்பர் இன்னொரு நண்பரிடம் எனக்கு Interview-க்கு போக பிடிக்காது டா என்று சொல்கிறார்.. அதற்கு ஏன்டா என்று அவருடைய நண்பர் கேட்கிறார்? அவர் கூறிய பதில்..

விடை: நாலு பேர் கேள்வி கேக்குற மாதிரி நடந்துக்க கூடாதுன்னு எங்க அப்பா சொல்லிருக்காரு டா

11. Wife: என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போறீங்க.?

விடை: டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கானு Check பண்ணிக்க சொன்னாரு.

12. வெற்றிலையுடன் சேராத பாக்கு எது?

விடை: மைசூர் பாக்கு.

இதையும் கிளிக் செய்யுங்கள் 👉 தமிழ் ஜோக்ஸ்

13. Patient ஒருவர் மருத்துவரிடம் என்ன நாய் கடித்துவிட்டது என்று கூறுகிறார்.. அதற்கு மருத்துவர் எந்த இடத்தில் நாய் கடித்தது என்று கேட்கிறார்? அதற்கு Patient கூறிய பதில் என்ன தெரியுமா.?

விடை: பெருமாள் கோயில் சந்தில் Doctor 😂😂😂

14. ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் மாணவர்களிடம் எறும்பு பெரியதா.? யானை பெரியதா என்று கேட்கிறார்.. அதற்கு மாணவர் கூறிய விடை..

விடை: அப்படியெல்லாம் சும்மா சொல்ல முடியாது மேடம் பிறந்த தேதி வேணும்.😁

15. தீபாவளிக்கும், பொங்கலுக்கு என்ன வித்தியாசம்.?

விடை: தீபாவளி அன்று பொங்கல் சாப்பிடலாம், ஆனால் பொங்கல் அன்று தீபாவளியை சாப்பிட முடியுமா..😂

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement