வாயில உள்ள 32 பல்லும் தெரியுற அளவுக்கு சிரிக்க வைக்குற மொக்க ஜோக்ஸ் தெரிஞ்சுக்கலான் வாங்க..!

Advertisement

Marana Kadi Jokes in Tamil With Answers

வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது பழமொழி. இத்தகைய பழமொழியினை தான் நம் முன்னோர்களும் பின்பற்றி வந்தார்கள். அதாவது நிறைய காமெடி வீடியோ, படம் மற்றும் புத்தகம் என இதுபோன்றவற்றையினை படித்தும், பார்த்தும் வந்தார்கள். ஆனால் இப்போது உள்ள காலத்தில் உள்ள ட்ரெண்டிங் என்னவென்றால் மரண மொக்க கடி ஜோக்ஸ் தான் மிகவும் ட்ரெண்டிங் ஆகா இருக்கிறது. இந்த ஜோக்கினை எல்லாம் கேட்டால் சிரிப்பும் வரும் மற்றும் கொஞ்சம் கடுப்பும் வரும். அந்த வகையில் இன்றைய பதிவில் வாயில் இருக்கிற 32 பல்லும் தெரியிற அளவுக்கு சிரிக்க வைக்கின்ற மரண கடி ஜோக்கினை படித்து வாய்விட்டு சிரிக்கலாம் வாங்க..!

மரண கடி ஜோக்ஸ் இன் தமிழ்

  1. கைல எப்போது கட்டையோட அலைகிறாரே அவர் யார் தெரியுமா..?

விடை: கட்ட பிரம்மச்சாரி.

2. பேச முடியாது வாய் எது..?

விடை: செவ்வாய். 

3. நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் தெரியுமா..?

விடை: அது நாய்ட்ட தான் கேக்கணும்.

4. அன்னப்பறவை ஏன் பாலையும், தண்ணீரையும் தனித்தனியாக பிரிக்கிறது..?

விடை: வேற எதுக்கு குடிக்க தான் பிரிக்குது.

5. 2025 உலகம் எப்படி இருக்கும் தெரியுமா..?

விடை: வேற எப்படி முன்னாடி இருந்த மாறி உருளையாக தான் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Tamil Mokka Jokes | தமிழ் ஜோக்ஸ் | Kadi Jokes Tamil

6. ஒரு அம்மா சர்க்கரை டப்பால சர்க்கரையை Full-ஆ வைக்கவே மாட்டாங்களான் ஏன்..?

விடை: டாக்டர் சொன்னாங்களாம், Sugar-ஆ Control-லா வச்சுக்கிட்டா தான் உடம்புக்கு நல்லதுனு.

7. தோசை மாவுக்கும், பூரி மாவுக்கும் என்ன வித்தியாசம்.?

விடை: பூரி மாவுல தோசை சுடலான், ஆனா தோசை மாவுல பூரி சுட முடியுமா.

8. தண்ணீயே வராத Tube எது தெரியுமா..?

விடை: வேற எது YouTube தான்.

9. ஒருத்தன் ஷாப்பிங் போனானாம் அங்க இருந்த Bike Number Plate-அ கையாள அழுத்திக்கிட்டே இருந்தானாம் ஏன்..?

விடை: ஏன்னா அந்த Number Plate-ல Press-னு இருந்துச்சாம்.

10. ஒருத்தவன் ஜூஸ் வாங்கும் போது எல்லாம் கதவ சாதிக்கிக்கிட்டே குடிச்சானாம் ஏன்..?

விடை: ஏன்னா அவன் வாங்குன ஜூஸ் சாத்துக்குடி ஜூஸாம்.

படிக்க படிக்க வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மொக்க கடி ஜோக்ஸ்.. 

 

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement