மொக்க ஜோக்ஸ் விடுகதை | Mokka Jokes Tamil..!

Advertisement

மொக்க ஜோக்ஸ் விடுகதை | Mokka Jokes Tamil..!

பொதுவாக ஒருவரை அழவைப்பதற்கு என்று பல செயல்கள், கஷ்டங்கள் என இவை எல்லாமே இருக்கும். இவ்வாறு மட்டும் இல்லாமல் வேறு எந்த எந்த வழிகளில் இருந்து ஒருவரை துன்பப்படுத்துவதற்கு என்று சிலர் வேண்டும் என்றே கிண்டலும், கேலியுடனும் பேசுவார்கள். இதன் அப்படி ஒருவரை துன்பத்திற்கு செல்வது வேண்டும் என்றால் மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஒருவரை இன்பத்திற்கு உள்ளாக்குவது என்பது அவ்வளவு பெரிய செயல் ஒன்றும் கிடையாது.

ஏனென்றால் ஒருவரை சாதாரணமாக சிரிக்க வைக்க வேண்டும் எனும் போது நாம் அவ்வளாக எதுவும் பெரிய கஷ்டப்பட வேண்டிய நிலைமை இருக்காது. அதுவே கஷ்டத்தில் உள்ள ஒருவரை சிரிக்க வைக்க வேண்டும் என்பது அப்படி ஒன்றும் எளிதான ஒன்று கிடையாது. ஆனால் சில ஜோக்ஸ், கடி ஜோக்ஸ் மற்றும் மொக்க ஜோக்ஸ் என இவற்றை எல்லாம் நாம் பார்க்கும் போது நம்மை அறியாமலே நாம் சிரித்து விடுவோம். அந்த வகையில் இன்றைய பதிலும் உங்களை சிரிக்க வைக்கக்கூடிய மொக்க ஜோக்சினை தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇மரண மொக்க ஜோக் சொல்றேன் கேட்டுக்கோங்க 

மொக்க ஜோக்ஸ் விடுகதை:

மொக்க ஜோக்ஸ் விடுகதை

1. ஒருத்தன் 10 நிமிசத்துக்கு ஒரு முறை படிச்சானான் ஏன்..?

    விடை: ஏன்னா அவங்க டீச்சர் நிறுத்தி நிறுத்தி படிக்க சொன்னாங்களான்.

2. ஒரு பையன் ஸ்கூலுக்கு உட்கார்ந்து உட்கார்ந்து போனான் ஏன்..?

விடை: அவங்க அம்மா சொன்னாங்களாம் நிக்காம போகணும்னு.

3. டாக்டர் ஒருத்தருகிட்ட வீடு, காரு, பங்களா ஏன் பைக்குனு எல்லாமே இருந்தும் கூட அவரு நடந்து தான் ஹோஸ்பிட்டலுக்கு போவாராம் ஏன் தெரியுமா…?

விடை: ஏன்னா அவரு கால்நடை டாக்டரான்.

4. ஒரு வக்கீலு கோர்ட்டுக்கு போகும் போது டார்ச் லைட்டு எடுத்துட்டு போனாராம் ஏன்..?

விடை: ஏன்னா சட்டை ஒரு இருட்டு அறையில அதனால தான்.

5. சோப்பு டப்பாவுல ஏன் குட்டி குட்டி ஓட்டை இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?

விடை: பெரிய ஓட்டையா இருந்தா சோப்பு கீழ விழுந்துடும்ல அதனால தான்.

6. பீட்ரூட்டை பச்சையா சாப்பிட முடியாது ஏன் தெரியுமா.?

விடை: பீட்ரூட் சிவப்பா இருக்குல அதனால தான்.

7. ஒரு பொண்ணு குக்கர கீழ தூக்கி போட்டுச்சாம் ஆனா அது கீழ விழவே இல்லையான் எப்படி..?

விடை: ஏன்னா அது தான் Butterfly குக்கருல.

8. பசுமாடு ஏன் பால் தருகிறது?

விடை: அதனால் காப்பி டீ தர முடியாதுல அதனால தான்.

9. டாக்டர் கண் ஆபரேஷன் பண்றதுக்கு முன்னால சூரியன் வணங்க சொல்றீங்களே ஏன்..?

விடை: கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியாதுல அதுக்கு தான்.

10. ஒருத்தவன் அவங்க அம்மாவுக்கு லெட்டர் எழுதும் போது ரொம்ப மெதுவா எழுதுனான் ஏன் தெரியுமா..?

விடை: ஏன்னா அவங்க அம்மாவுக்கு வேகமா படிக்க வராதாம்.

கணவன் மனைவி கடி ஜோக்ஸ்

மொக்க ஜோக்ஸ்:

மொக்க ஜோக்ஸ்

11. எந்த பூச்சியை தொட்டால் சாக் அடிக்கும் தெரியுமா..?

விடை: மின்மினி பூச்சியை.

12. இரும்பு மனிதர் என்று யாரை அழைக்கலாம்..?

விடை: மனைவியின் அடியே தாங்கிக் கொண்டு ஆழமாய் இருப்பவரை மட்டும் தான்.

13. அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன வித்தியாசம்..?

விடை: வேற என்ன வயது வித்தியாசம் தான்.

14. எறும்பு பெருசா யானை பெருசா..?

விடை: எது பெருசுனு பொறந்த தேதி இருந்தா தான் சொல்ல முடியும்.

15. கும்பகர்ணன் மாச கணக்குல தூங்கினான்ல அது என்ன காலம் சொல்லுங்க பாப்போம்..?

விடை: கொசுவே இல்லாத காலம் தான்.

16. வேலைக்கு போற விலங்கு எது தெரியுமா..?

விடை: வேற எது நம்ப பனிக்கரடி தான்.

17. அமெரிக்காவில் பிறந்த குழந்தை பல்லு என்ன கலர் இருக்கும்..?

விடை: பிறந்த குழந்தைக்கு தான் பல்லே இருக்காதே எப்படி.

18. ஒருத்தவன் பொண்டாட்டி சமையல வாயில வைக்க முடியலனு பேங்க் மேனேஜர் கிட்ட போய் சொன்னாராம் ஏன்..?

விடை: ஏன்னா நம்ப கஷ்டத்தை சொன்ன தானா லோன் கிடைக்கும் அதனால தான்.

19. ஒருத்தன் ரொம்ப நேரமா வண்டிய தள்ளிகிட்டே போனானாம் ஏன்..?

விடை: வேற என்ன அது தள்ளுவண்டியாம்.

20. ஹோட்டல் போயிட்டு இட்லிய பார்த்து பயந்து ஓடினான் ஏன்..?

விடை: ஏன்னா இட்லில இருந்து ஒரே ஆவியா வந்துச்சாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Tamil Mokka Jokes | தமிழ் ஜோக்ஸ் | Kadi Jokes Tamil

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement