விடுகதையில் நகைச்சுவை படித்து பாருங்க..

Advertisement

நகைச்சுவை விடுகதை

விடுகதை என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். விடுகதையில் கேள்விகள் கேட்டு அதற்கு பதில் சொல்வது பிடித்தமான ஒன்றாகும். இளம் வயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடும் விளையாட்டாக விடுகதை உள்ளது. விளையாட்டாக மட்டுமில்லாமல் குழந்தைகளை யோசிக்க கூடிய அளவிலும் இருக்க கூடியது விடுகதை. இதில் விடுகதையாக மட்டுமில்லாமல் நகைசுவையும் இருந்தால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்க.. இந்த பதிவில் நகைசுவையோடு கூடிய விடுகதைகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

மொக்க ஜோக்ஸ் விடுகதை:

  1. பேங்க்ல பணம் எடுக்க போனவருக்கு ஷாக் அடிச்சதாம் ஏன்.?

விடை: ஏன்னா அது கரண்ட் Account

2. ரொம்ப நாள் உயிரோட இருக்க என்ன பண்ணனும்.?

விடை: சாகமா இருக்கனும்

3. நாம் ஏன் படுத்துகிட்டே தூங்குறோம்.?

விடை: நின்னுக்கிட்டே தூங்குனா கீழே விழுந்துடுவோம்

4. Boys எல்லாம் Right hand-ல் வாட்ச் கட்டுறாங்க. Gilrs எல்லாம் Left hand-ல வாட்ச் கட்டுறாங்க ஏன்.?

விடை: ஏன்னா டைம் பார்க்க தான்.

5. எல்லா Stage-லையும் டான்ஸ் ஆடலாம்,ஆனால் ஒரு ஸ்டேஜ்ல மட்டும் டான்ஸ் ஆட முடியாது.

விடை: கோமா ஸ்டேஜ்

6. ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் இருந்துச்சாம் அதுல ஒரு கல் போட்டா என்ன ஆகும்

விடை: கல்லு நெனஞ்சு போகிடும்.

கவலைகளை மறந்து சிரிக்க இதை மட்டும் ஒரு முறை படியுங்கள்

7. வெயிட் இல்லாத House எது.?

விடை: Light house

8. உயிர் இல்லாத விலங்கு எது.?

விடை: கைவிலங்கு

9. ஒரு Function-க்கு போன எல்லாரும் வரையும், காப்பும் எடுத்துட்டு வந்தங்களாம் ஏன்.?

விடை: ஏன்னா அது வளைகாப்பு Function

10. கொசு வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்

விடை: அதுகிட்ட Address கொடுக்காம இருக்கனும்

11. குடிக்க முடியாத டீ எது.?

யாராலயும் அணைக்க முடியாத நெருப்பு எது.?

விடை: Free fire

12. தமிழ் New year-க்கும் Engilsh New Year-க்கும் என்ன வித்தியாசம்

விடை: 4 மாதம் தான் வித்தியாசம்.

13. ஒருத்தவுங்க தட்டு கரண்டி எல்லாரும் எப்பப்பாரு தூக்கி வீசிட்டு இருகாங்க ஏன்.?

விடை: ஏன்னா அவங்களுக்கு வீசிங் Problem ஆ

14. கண்ணீருக்கும் தண்ணீருக்கும்  என்ன வித்தியாசம்

விடை: ஒரே ஒரு எழுத்து தான் வித்தியாசம்

உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து சிரிக்க வேண்டுமா அப்போ இதை படியுங்கள் உங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியாது

15.Tension அதிகமானால் என்னாகும்

விடை: ELEVEN சன் ஆகும்

16. ஒரு கோழி காலையில் கத்தினால் என்ன அர்த்தம்

விடை: பொழுது விடுசுஜூருச்சுன்னு அர்த்தம் 

17. ஒரு காடு வந்தா மட்டும் FAN கேட்கும் அது என்ன காடு

விடை: வேக்காடு

18. கொடுக்க முடியாத வரி எது.?

விடை: ஜனவரி, பிப்ரவரி

19. குடிக்க முடியாத டீ எது.?

விடை: கரண்டி

20. மரமே இல்லாத என்ன காடு.?

விடை:  சிம்கார்டு

இதனை ஒரு முறை படித்தீர்கள் என்றால் நினைத்து நினைத்து சிரிப்பீர்கள்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்

 

Advertisement