உங்க கவலையெல்லாம் மறந்து சிரிக்க இந்த கடிஜோக்கை படியுங்க..!

Advertisement

Mokka Kadi Jokes

வாழ்க்கையில் அனைவருக்கும் கோபம், டென்ஷன், கவலை எல்லாம் இருக்கும். அதனை மறக்காமல் நம் மனதிலே வைத்துக்கொண்டால் உடலில் ஆரோக்கிய பிரச்சனைகள் தான் வரக்கூடும். எனவே நீங்கள் டென்ஷன் அல்லது கவலையாக இருக்கும்போது சில செயல்களை செய்தால் துன்பமெல்லாம் மறந்து விடும். துன்பத்தை மறக்க பல வழிகள் இருந்தாலும் அதில் முதலாவதாக இருப்பது கடிஜோக்ஸ் தான். நாம் என்னதான் டென்ஷன்னாக இருந்தாலும் கடிஜோக்ஸ் படித்தால் போதும் டென்ஷன் எல்லாம் நீங்கி சிரித்து மகிழுவோம். எனவே நீங்கள் படித்து சிரிக்கக்கூடிய வகையில் இப்பதிவில் சில மொக்க கடிஜோக்ஸ்களை கொடுத்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து மகிழுங்கள்.

Sema Kadi Jokes in Tamil With Answers:

1.டாக்டரிடம் நான் டைலர் வேலை பார்க்கிறதா சொல்லி இருக்கக்கூடாது.! என்று ஒருவர் கூறுகிறார். அதற்கு இன்னொருவர் ஏன் என்னாச்சி..? என்று கேட்கிறார்..?அதற்கு அவர், என்னோட பையனுக்கு ஆப்ரேஷன் முடிஞ்சதும் நானே தையல் போடனும் டாக்டர் என்று சொல்லிவிட்டார்.

2. ஒரு யானை தண்ணிக்குள்ள குதிச்சா என்ன ஆகும்..?

விடை: வேறென்ன நீர் யானையா ஆகும்.

3. காகம் தண்ணீரில் எப்போதும் மூழ்காது ஏன்.?

விடை: ஏன்னா, காகம் எப்போதும் கரைய தான் செய்யும் எப்படி மூழ்கும்.

4. ரொம்ப குளிர்ச்சியான இங்கிலிஷ் லெட்டர் எது.?

விடை: “B” தான். ஏன்னா அதுதான் AC -க்கு நடுவுல இருக்கு.

5. ஒரு மாசத்துல மொத்தம் எத்தனை நாலு இருக்கு..?

விடை: மூணு நாலு தான்.! எப்படின்னா 4,14,24.

இந்த செம கடிஜோக்ஸை ஒரு முறை படிச்சு பாருங்க சிரிப்பை நிறுத்தவே மாட்டீங்க..!

6. தண்ணீயே இல்லாத கடல் எங்கே இருக்கு..?

விடை: வேறெங்க MAP -ல தான் இருக்கும்.

7. சாவி தொலைஞ்சு போனா யார்கிட்ட கேட்கணும்.?

விடை: கீதா (Key தா) கிட்ட தான் கேட்கணும்.

8. எல்லா லெட்டரும் வர்ற மாதிரி ஒரு Word சொல்லுங்க பாப்போம்..?

விடை: வேறென்ன அது Post Office லெட்டர் தான்.

9. அதிர்ஷ்டமே இல்லாத ஊர் எது.?

விடை: வேறெந்த ஊரு லக்னோ தான்.

10. ஒருத்தனோட தலையில இருந்து “இலை” யா கொட்டுச்சாம் ஏன்.?

விடை: ஏன்னா அவன் மர மண்டையாம்.

11. கல்யாண வீட்டுல ஏன் வாழைமரம் கட்டுறாங்க.?

விடை: ஏன்னா கட்லனா விழுந்துரும்ல அதான்..

12.சோப்பு டப்பால ஏன் சின்ன சின்ன ஓட்டை இருக்கு..?

விடை: சோப்பு டப்பால பெரிய ஓட்ட இருந்தா சோப்பு கீழே விழுந்துரும்ல அதான்..

13. பஜ்ஜி மாவுக்கும் கடலை மாவுக்கும் என்ன வித்தியாசம்..?

விடை: பஜ்ஜி மாவுல இருந்து பஜ்ஜி வரும். ஆனா கடலை மாவுல இருந்து கடலை வருமா..?

14. உயிர் இல்லாத விலங்கு எது.?

விடை: கை விலங்கு.

15. அழுகியே போகாத பழம் எது..?

விடை: அப்பளம்.

Tamil Mokka Jokes | தமிழ் ஜோக்ஸ் | Kadi Jokes Tamil

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்
Advertisement