விடுகதையில் கடி ஜோக்ஸ் படித்து பாருங்க..

Advertisement

Tamil Kadi Jokes Vidukathaigal

பிறப்பு என்பது ஒரு முறை தான். அடுத்த நொடி என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது, அதனால் வாழ்கின்ற  வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். ஆனால் நாம் எல்லாரும் சந்தோஷமாக வாழுகிறோம் என்றால் கேள்வி தான். பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றோம். சில நபர்கள் வேலையில் உள்ள கஷ்டம், வீட்டில் உள்ள கஷ்டம் என இரண்டையும் நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள். ஆனால் எவ்வளவு பெரிய கஷ்டத்திலும் ஏதவாது ஒரு ஜோக்கை கேட்டாலே நம்மை அறியாமல் சிரிப்பு வந்துவிடும். அதனால் தான் இந்த பதிவில் மனம் விட்டு சிரிப்பதற்கு விடுகதையில் கடி ஜோக்ஸை  பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉https://bit.ly/3Bfc0Gl

விடுகதையில் கடி ஜோக்ஸ்:

  1. பேன்‌ ஏன்‌ மேலேயே சுத்துது? ஏன்‌?

விடை: உட்காருவதற்கு அதற்கு கால்‌ இல்லை அதனால்‌ தான்‌.

2. வானவில்லில் கடைசியில் இருப்பது என்ன?

விடை: ல் என்னும் எழுத்து

3. டாக்டர் ஊசி போட வரும்போது ஒருத்தன் தடுத்தானாம்? ஏன்?

விடை: அது தடுப்பூசியாம்

4. ஷேவ் பண்ண முடியாது தாடி எது.?

விடை: காத்தாடி

5. கீழே விழுந்தாலும் காயமடையாதது எது?

விடை: மழை

6. ஒரு பச்சைக் கல்லை கடலில் எறிந்தால் அது என்னவாகும்?

விடை: ஈரமாகும்

7. மரம், செடி இல்லாத காடு எது?

விடை: சிம்கார்டு

8. எல்லா கிளியும் பறக்கும், ஆனால் ஒரு கிளி மட்டும் பறக்காது அது என்ன கிளி?

விடை: சங்கிலி

9. பல் வலிக்கு முக்கியமான காரணம் எது?

விடை: பல் தான்

10. பசு ஏன் பால் தருது?

விடை: அதனால டீ, காபி தர முடியாது.

11. கோலம் போடுவதற்கு முன்னாடி எதுக்கு தண்ணி தெளிக்கணும்?

விடை: கோலம் போட்டதுக்கு அப்புறம் தெளிச்ச கோலம் அழிஞ்சுடும்

12. ஒரு கோழி காலைல கத்துனா என்ன அர்த்தம்?

விடை: அந்த கோழி எழுந்துருச்சுனு அர்த்தம்.

13. குடிக்க முடியாத டீ எது?

விடை: கரண்டி

14. எலி சாப்பிட்டு மிச்சம் வெச்ச சாதம் என்ன சாதம்?

விடை: எலிமிச்சசாதம்

15. கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?

விடை:  ஆட்டு இறைச்சி

இந்த கடிஜோக்ஸை ஒரே ஒரு முறை படித்து பாருங்கஉங்களால் சிரிப்பை நிறுத்தவே முடியாது

கவலைகளை மறந்து சிரிக்க இதை மட்டும் ஒரு முறை படியுங்கள்

உங்களின் கவலைகளை மறந்து சிரிக்க சில ஜோக்ஸ்

மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 கடி ஜோக்ஸ்

 

Advertisement