கல்வியில் சிறந்த பெண்கள் பெயர்கள் | Kalviyil Sirantha Pengal

Advertisement

கல்வியில் சிறந்த பெண்கள் பட்டியல் | Kalviyil Sirantha Pengal in Tamil

கல்வியில் சிறந்த பெண்கள் பட்டியல்: கல்வி என்பது அனைவரின் வாழ்விலும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். வாழ்க்கை என்ற வீட்டில் கல்வி என்ற விளக்கு ஏற்றப்பட்டால் தான் நமது வாழ்வானது பிரகாசிக்கும். கல்வி தான் மனிதருடைய அறிவு கண்களை திறக்கிறது. கல்வி கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று முன்னோர்கள் கூறி வைத்து சென்றுள்ளார்கள். கல்வி அறிவுடன் இருப்பவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவார்கள். நாம் கற்ற கல்வியை நம்முடன் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கும் அதை புகட்ட வேண்டும். நம் நாட்டில் கல்வியால் வளர்ச்சி அடைந்த பெண்மணிகள் (kalviyil sirantha pengal) பல பேர் உள்ளார்கள். அவர்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

சாதனை பெண்கள் பட்டியல்

ஊர்வசி சாஹ்னி:

ஊர்வசி சாஹ்னி

கல்வியில் சிறந்த பெண்கள்: டாக்டர் ஊர்வசி சாஹ்னி ‘ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளை’ என்ற கல்வி அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இவருக்கு வயது 62. இவர் 32 ஆண்டுகளாக சமூக சேவைகளிலும், பெண்களுடைய உரிமைக்காகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். “மாற்றத்தை கொண்டு வருவதற்கான சக்தி வாய்ந்த ஆயுதம் தான் கல்வி, ஆனால் மாற்றத்தை கொண்டுவரக்கூடிய கல்வியிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்” என்கிறார் டாக்டர் ஊர்வசி சாஹ்னி.

மெஹ்ரூனிசா சித்திகி:

கல்வி கற்பதற்கு எப்போதும் வயது தடையில்லை என்று கூறியவர் மெஹ்ரூனிசா சித்திகி. இவருக்கு வயது 65. பாலிவுட் நடிகர் நவாஜுதீன் சித்திகியின் தாய் மெஹ்ரூனிசா சித்திகியும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இரா திரிவேதி:

இரா திரிவேதி

kalviyil sirantha pengal names in tamil: இரா திரிவேதி 32 வயதினை உடையவர். இவர் எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் ஆவார். வெளி நடிப்பிற்காக நம்மளை நாமே ஒதுக்கிக்கொண்டால், நமக்குள் ஒளிந்து கிடக்கும் எல்லையற்ற திறமைகள் முடங்கிவிடும். நம்முடைய வரம்பற்ற திறன்களைப் பயன்படுத்த முடியாவிட்டால், உலகத்தில் இருந்து நாம் தனிமைப்பட்டுவிடுவோம்.” தன்னுடைய சிறந்த எழுத்தின் மூலம், கல்வியின் முக்கியத்துவத்தை புரியவைக்க முடியும், லாப நோக்கற்ற நடவடிக்கைகள் மூலம் மக்களின் மனதையும் எண்ணங்களையும் மேம்படுத்த முடியும் என்று கூறியவர்.

அதிதி அஸ்வதி:

அதிதி அஸ்வதி

அதிதி அஸ்வதி என்பவர் தொழிலதிபர் மற்றும் ‘இம்பைப்’ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியும் ஆவார். இவருக்கு வயது 35. கல்வி துறையில் பல மாற்றத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டவர் அதிதி. “உலகிற்கு ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரவேண்டும். அதற்காக, நேர்மறையான புரட்சியை உருவாக்குவோம்” என்று கூறியவர்.

பிரியங்கா ராய்:

பிரியங்கா ராய் என்பவருக்கு வயது 16 ஆகும். சிறந்த கல்வியாளர் பெண்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மாணவி. மேற்கு வங்க மாநிலத்தில் ராணாகாடில் இருந்து ஒரு வருடம் முன்பு டெல்லிக்கு வந்த பிரியங்கா, இப்போது கோவிந்த்புரியில் உள்ள டி.ஏ. காலனியில் தனது தாயுடன் வசித்து வருகிறார். “பிரியங்காவின் விருப்பமானது அடுத்தவர்களுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். தன்னுடைய சொந்த கால்களில் நிற்க விரும்புகிறேன்” என்று தன்னுடைய விருப்பத்தினை கூறியவர்.

தூலிகா கிரண்:

தூலிகா கிரண் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதுமட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு வயது 47 ஆகும். கடந்த 8 வருடமாக டெல்லி திஹார் சிறையில் சிறிய குழந்தைகளுக்கு கல்வி கற்று கொடுத்து வருகிறார். மேலும் அவர் பத்திரிகையாளராகவும் பணிபுரிந்தவர். தூலிகா கிரண் “உங்கள் மீது அதிக அன்பு காட்டுபவர்களின் மீது வெறுப்பினை காட்டாதீர்கள்”. உங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஏமாற்றாதீர்கள்” என்று கூறியவர்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement