இந்திய தண்டனை சட்டம் பிரிவு 392 | IPC Section 392 in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக பலருக்கு சட்டம் பற்றி எதுவும் தெரியாது. இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் நிறைய இருக்கிறது. இதை பற்றி வழக்கறிங்கர்களுக்கு தான் நிறைய தெரிந்திருக்கும். இருந்தாலும் நாம் சட்டங்களை பற்றி தெரிந்து வைத்துக்கொள்வது ஒன்று தவறு இல்லை. அப்பொழுது தான் சமூகத்தில் ஏதாவது பிரச்சனைகள் எழும்போது அந்த பிரச்சனையை சட்டம் வழியாக மிக சரியான முறையில் எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.
ஆகவே ஒவ்வொரு நாளும் நாம் ஏதாவது ஒரு சட்டத்தை பற்றி தெரிந்து வைத்துக்கொள்வோம். அதற்கு எங்கள் பொதுநலம்.காம் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி இன்றைய பதிவில் Section 392 IPC என்றால் என்ன?, இந்த சட்டத்தில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படுகிறது போன்ற தகவல்களை இங்கு நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்திய தண்டனை சட்டம் 207
392 IPC in Tamil:
இந்திய சட்டம் பிரிவு 392 கொள்ளை அடித்ததற்கான தண்டனை சட்டத்தை பற்றி கூறுகிறது. கொள்ளை அடிப்பதில் யார் ஈடுபட்டாலும் பத்தாண்டுகள் வரையில் கடுங்காவல் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து தண்டனையா வழங்கப்படும்.
சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகும் சூரியஉதயத்துக்கு முன்னும் அத்தகைய கொள்ளை நடைபெற்றிருந்தால், 14 ஆண்டுகள் வரையில் தண்டனை நீடிக்கப்படலாம்.
393 IPC in Tamil:
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 393-யின் படி கொள்ளையடிக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனியுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
திருடினால் அல்லது ஒருவரை மிரட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்குமாம்..!
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |