இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 207
இந்திய குடிமக்கள் ஆகிய நாம் நமது நாட்டில் உள்ள சட்டங்களை தெரிந்து வைத்திருப்பது நமது கடமை. அந்த சட்டங்கள் நமக்கு சரியான சமையத்தில் துணைபுரியும். அனைத்து விதமான செயல்களும் சட்டத்தினை பின்பற்றியே நடக்கின்றது. நமக்கு தேவையான சலுகைகள், நமது கடமைகளை நமக்கு சட்டம் தெளிவாக விளக்குகிறது. ஒரு சட்டத்தை மீறும் போது அந்த சட்டத்தால் அந்த அளவிலான தண்டனைகள் இருக்கின்றன என்பதனை தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் இன்று இந்திய தண்டனை சட்டம் 207 பற்றி தெரிந்து கொள்வோம். நாம் அனைவரும் சட்டங்களை தெரிந்து வைத்திருப்பது நமது கடசமாய் மற்றும் உரிமையகும். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.
IPC Section 207 in Tamil:
ஒரு சொத்தின் மீது அல்லது அந்த சொத்தில் உள்ள ஏதேனும் ஒரு பொருளின் மீது தனக்கு உரிமை இல்லை என்பதை அறிந்தே அதன் மீது உரிமை கொண்டாடுவது.
நீதிமன்றம் அல்லது அதற்கு சமமான அதிகாரம் கொண்ட அமைப்பு, அந்த சொத்தின் மீது அந்த குறிப்பிட நபருக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பு வழங்கிய பின்னர் அந்த சொத்தை அடைய சட்டத்திற்கு புறம்பான வகையில் ஏதேனும் செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கும் பிரிவு இந்திய தண்டனை சட்டம் 207 ஆகும்.
அந்த சொத்தை அடைய சூழ்ச்சி, மோசடி போன்றவற்றில் ஈடுபடும் நபர் ipc section 207-கீழ் தண்டிக்கப்படுவர்.
இந்திய தண்டனை சட்டம் 207
எடுத்துக்காட்டாக.
- தனது குடும்ப சொத்தை தான் மட்டுமே பயன்படுத்துவது அதில் பிறருக்கு உரிமை இல்லை என்பதை நிலை நாட்டி சொத்தை அபகரிக்க செய்வது.
- ஒரு குறிப்பிட்ட சொத்தின் மீது வங்கியில் கடன் பெற்று, கடனை திருப்ப செலுத்த பட்சத்தில் வங்கி பறிமுதல் செய்யும்போது அதற்கு இடையூறாக இருப்பது.
- நீதிமன்ற தீர்ப்பின்படி குறிப்பிட்ட சொத்தை இழந்த பின்னர் அதனை சூழ்ச்சிகள் செய்து அடைய பார்ப்பது.
தண்டனை மற்றும் அபாதரம்:
மேல சொல்லப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபாதரம் விதிக்கப்படும்.
நீதிமன்றத்தின் ஆணையை மீறும் பட்சத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சொத்தின் மதிப்பை பொறுத்து அபாதரம் விதிக்கப்படும்.
சட்டம் தீவிர நிலையை அடையும் போது சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச் சட்டம் 2007
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |