பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலச் சட்டம் 2007:
மூத்த குடிமக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே உள்ளது என்கிறது ஆய்வு. ஆனால் அவர்களின் எண்ணிக்கை மட்டும் உயரவில்லை இந்தியாவில். அவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்களும் அதிகரித்துள்ளது. இதில் சுகாதாரம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு, தங்குமிடம் மற்றும் சுற்றுச்சூழல், கைவிடப்பட்ட சூழ்நிலை, துன்புறுத்தல் மற்றும் உரிமைகள் மறுப்பு போன்றவையும் அடங்கும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள 2007 ம் ஆண்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்….
Maintenance And Welfare Of Parents And Senior Citizens 2007
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் பராமரிப்பு மற்றும் அவர்களின் நல வாழ்விற்காக கொண்டு வரப்பட்ட சட்டம். பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007
அந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது தான், தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு விதிகள் 2009. இது தமிழ்நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பபட்டது.
பெற்றோர் அதாவது வயதில் மூத்த குடிமக்கள் தங்களை பராமரித்துக் கொள்ள போதுமான பொருளாதார வசதியோ, சொத்துகளோ இல்லாத பொழுது அல்லது தங்களுக்கு உரிய பராமரிப்பில்லை என்று என்னும் போதும் இச்சட்டத்தின் கீழ் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோரிடமிருந்து பராமரிப்புத் தொகை பெறலாம்.
பெற்றெடுத்த தாய் தந்தை மட்டுமல்லாது மாற்றாந் தாய் – தந்தை, வளர்ப்புத் தாய் – தந்தை ஆகியோரும் இச்சட்டத்தின் கீழ் பராமரிப்புத் தொகை கேட்கலாம். பிள்ளைகள் இல்லாத மூத்த குடிமக்கள் தனது சொத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர் அல்லது தனது காலத்திற்குப் பிறகு தனது சொத்தை அடைய இருப்பவர் ஆகியோர் மீதும் பராமரிப்புத் தொகையை வழங்குமாறு மனு கொடுக்கலாம்.
மனு அளிக்கும் முறை:
இச்சட்டத்தின் கீழ் பராமரிப்பு உதவித் தொகை வேண்டி மனு அளிக்க நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டியது இல்லை. கோட்டாட்சியர் (commissioner) தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தில் மனுவினை தாக்கல் செய்யலாம். இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை விரைந்து தீர்ப்பதற்காகவும், குழந்தைகள் மற்றும் சட்டப்பூர்வ வாரிசுகளிடம் இருந்து பெற்றோருக்கு பராமரிப்புத் தொகையைப் பெற, ஒவ்வொரு துணை கோட்டத்திலும், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டிருக்கும்.
அதில் மாவட்ட சமூக நல அலுவலர்கள், பராமரிப்பு அலுவலர்களாகவும் சமரச அலுவலர்களாகவும் செயல்பட்டு இரு தரப்பினருக்கும் இடையே சுமுகமான தீர்வை கொண்டுவர முயற்சிப்பார்.
கோட்டாட்சியர் கூறும் உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு, நீதிமன்றத்திற்க்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் உண்டு.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
மாத பராமரிப்பு தொகை வேண்டி, இந்த சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் மனு 90 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கப்படும்.
பராமரிப்பு தொகை வழங்கவேண்டியவர், தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட மறுத்தல், தீர்ப்பாயம் அவர்களுக்கு அபராதம் விதிக்கும்.
தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட மறுத்தல், மூத்த குடிமக்களின் மாத பராமரிப்பு தொகையில் முழு அல்லது எந்தப் பகுதியையும் ஏற்றுக்கொள்ள உத்தரவிடலாம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்
அதிகபட்ச மாத பராமரிப்பு தொகையாக ரூ. 10,000/- விட அதிகமான நிர்ணயிக்ககூடாது.
தீர்ப்பாயத்தின் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது, முதியோருக்கு இடைக்கால பராமரிப்புக்காக மாதாந்திர உதவித்தொகையை வழங்க அவர்களின் வாரிசுகளுக்கு உத்தரவிடலாம்.
வழங்கப்படும் உதவிகள்:
இச்சட்டத்தின் கீழ் பெற்றோர்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக மாதம் ரூ. 10,000-த்திற்குள் அவர்களின் குழந்தைகள் மற்றும் உறவினர்களிடமிருந்து பெற்று தரப்படும்.
மூத்த குடிமக்கள் பாதுகாப்புக்குரியவர்கள், அவர்களை கைவிட்டால், அத்தகைய நபர்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்படலாம். அல்லது சிறை தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் விதிக்கப்படலாம்.
உதவி எண்:
முதியோர் உதவி எண்.14567
இந்த உதவி எண் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முதியோர் இல்லங்கள், முதியோர் நலத் திட்டங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனை, சட்ட வழிக்காட்டுதல், மீட்பு உதவி போன்ற சேவைகளை வழங்குவருகிறது.
மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Law |