Train Ticket எடுக்கலான TC-க்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் தெரியுமா?

Advertisement

ரயில்வே தண்டனை சட்டம் – Railway act in tamil

இந்தியாவில் தினமும் ரயில் பயணத்தை மேற்கொள்பவர்கள் கோடிக்கணக்கான நபர்கள்  பயணிக்கின்றன. அத்தகைய பயணத்தின் போது ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது போன்ற குற்றங்களுக்கு அபராதம் எவ்வளவு தெரியுமா? சிறை தண்டனையும் உண்டு. அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

டிக்கெட் அல்லது பாஸ் இல்லாமல் பயணம் செய்தால்:

ரயில்வே சட்டம் பிரிவு 138இன் கீழ், பயணித்த தூரம் அல்லது ரயில் புறப்பட்ட நிலையத்திலிருந்து எவ்வளவு கட்டணமோ அது வசூலிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.250 ரூபாய். இவை இரண்டில் எது அதிகமோ அது வசூலிக்கப்படும்.

மோசடியான பயணம்:

ரயில்வே சட்டம் பிரிவு 137இன் கீழ் 6 மாத சிறை தண்டனை. ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும்.

ரயிலில் இருக்கும் அலாரம் சங்கிலி இழுத்தல்:

ரயில்வே சட்டம் பிரிவு 141இன் கீழ் 12 மாத சிறை தண்டனை. 1000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி:

ஊனமுற்ற பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் பயணம் செய்தால் ரயில்வே சட்டம் பிரிவு 155 (அ)இன் படி, 3 மாத சிறை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்திய தண்டனை சட்டம் 207

அத்துமீறி நுழைதல்:

ரயில்வே சட்டம் பிரிவு 147இன் கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும்.

மேற்கூரையில் பயணம் செய்தல்:

ரயில்வே சட்டம் பிரிவு 156இன் கீழ் 3 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.

தொல்லை கொடுப்பது, குப்பை கொட்டுவது

ரயில்வே சட்டம் பிரிவு. 145 (b)இன் கீழ் முதல் குற்றத்திற்கு ரூ.100 அபராதம், 2வது மற்றும் தொடர்ந்து செய்தால் ரூ.250 அபராதமும் ஒரு மாதம் சிறை தண்டனையும்.

பொது அறிவிப்புகளை சீர்குலைத்தல் – Bill Pasting:

ரயில்வே சட்டம் பிரிவு 166 (b)இன் கீழ் 6 மாத சிறை தண்டனை, 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.

விளம்பரப்படுத்துதல்:

ரயில்வே சட்டம் பிரிவு 143இன் கீழ் 3 ஆண்டுகள் சிறை. 10,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும்.

அங்கீகரிக்கப்படாத விற்பனை:

ரயில்வே சட்டம் பிரிவு 144இன் கீழ் ஒரு வருடம் சிறை., அபராதம் குறைந்தது 1,000 ரூபாய். அதிகபட்சம் 2,000 ரூபாய் அல்லது இரண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்திய தண்டனை சட்டம் 128,129 மற்றும் 130-க்கான விளக்கம்..!

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement