வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இந்திய தண்டனை சட்டம் 128,129 மற்றும் 130-க்கான விளக்கம்..!

Updated On: October 16, 2023 1:11 PM
Follow Us:
IPC Section 128 to 130 in Tamil
---Advertisement---
Advertisement

IPC Section 128 to 130 in Tamil

பொதுவாக நம்மை காப்பாற்றுவதற்காகவும் நாட்டின் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்கவும் உருவாக்கப்பட்டது தான் இந்திய தண்டனை சட்டம். ஆனால் அப்படி நம்மை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தண்டனை சட்டம் பற்றிய சரியான புரிதல் உள்ளதா என்றால் இல்லை என்பதே உண்மை. அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு சட்ட பிரிவு பற்றிய சரியான விளக்கத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 128, 129 மற்றும் 130 பற்றிய சரியான விளக்கத்தை பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதை தெரிந்துக் கொள்ளுங்கள்=> இந்திய தண்டனை சட்டம் 121,122 மற்றும் 123-க்கான விளக்கம்

IPC Section 128 in Tamil:

ஒருவர் குற்றவாளி என்று குற்றம் சாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு கைதி என்று தெரிந்தும் அவர் தப்பிப்பதற்கு உதவி புரிதல் குற்றமாகும். இத்தகைய குற்றத்தை புரிந்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

IPC Section 129 in Tamil:

சிறையில் ஒருவர் தனது கவனக்குறைவின் காரணமாக குற்றவாளி தப்பிப்பதற்கு அனுமதித்தால் அவர் குற்றம் புரிந்தவராக ஆகுகின்றார்.

இத்தகைய குற்றத்தை புரிந்தவருக்கு மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

இதை தெரிந்துக் கொள்ளுங்கள்=> லஞ்சம் வாங்குபவர்களுக்கும் சட்டத்தில் தண்டனை உண்டு உங்களுக்கு தெரியுமா

IPC Section 130 in Tamil:

ஒருவர் சிறையில் இருந்து தப்பித்து வந்த குற்றவாளி என்று தெரிந்தும் அவருக்கு அடைக்கலம் கொடுத்தால்  குற்றமாகும். இத்தகைய குற்றத்தை புரிந்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை அல்லது பத்து வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.

இதை தெரிந்துக் கொள்ளுங்கள்=> ஒருவரை மிரட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்கும்

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now