கண்ணாடி பொருட்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று தெரியுமா..?

Advertisement

கண்ணாடி பொருட்கள்

பொதுவாக நம்முடைய வீட்டில் நிறைய பொருட்கள் பயன்படுத்தி இருப்போம். அவ்வாறு நாம் பயன்படுத்தும் பொருளானது பிளாஸ்டிக், சிலவர், கண்ணாடி, அலுமினியம் மற்றும் பீங்கான் ஆகிய முறைகளில் இருக்கும். என்ன தான் நாம் நிறைய பொருட்களை வீட்டில் பயன்படுத்தினாலும் கூட கண்ணாடி மட்டும் பீங்கான் பொருட்கள் பார்த்து பார்த்து தான் உபயோகப்படுத்துவோம். ஏனென்றால் கண்ணாடி பொருட்களை பயன்படுத்தும் போதும் கொஞ்சம் கை தவறி கீழே விழுந்தாலும் கூட அப்படியே நொறுங்கி கீழே விழுந்து விடும். அதுவும் முகம் பார்க்கும் கண்ணாடி என்றால் நம்முடைய வீட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நாம் தினமும் சமையலுக்கு தேவைப்படும் பொருட்களை கொட்டி வைப்பது முதல் முகம் பார்ப்பது வரை அதிகமாக நாம் பயன்படுத்தி வரும் கண்ணாடி எதிலிருந்து எப்படி தயாரிக்கபடுகிறது தெரியுமா..? அப்படி தெரியவில்லை என்றால் இந்த பதிவில் கண்ணாடி பொருட்கள் எதிலிருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்ற செய்தியினை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

கண்ணாடி எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது..?

கண்ணாடி பொருட்கள்

நம்முடைய வீட்டில் பயன்படுத்தும் கண்ணாடி பொருட்கள் அனைத்தும் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்று கேட்டால்… கண்ணாடி பொருட்கள் அனைத்தும் மணலில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.

நம்முடைய ஊரில் காணப்படும் ஆறு மற்றும் கடற்கரையில் காணப்படும் மணல்களில் இருந்து தான் அனைத்து விதமான கண்ணாடி பொருட்களும் தயார் செய்யப்படுகிறது.

காந்தம் எப்படி தயாரிக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா.. 

கண்ணாடி தயாரிக்கும் முறை:

கண்ணாடி தயாரிக்கும் முறை

முதலில் ஆறு மற்றும் கடற்கரையில் இருக்கக்கூடிய மணலை தேவையான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு அத்தகைய மணலை 1700 °Celsius அளவில் வெப்பப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நாம் வெப்ப படுத்தும் போது மணலானது உருகி திரவ நிலைக்கு வந்து விடும்.

அதன் பின்பு இதனுடன் உருகிய நிலையில் உள்ள மணலானது எளிய முறையில் உருகவும் மற்றும் உருகிய திரவம் நீரில் கரையாமல் இருக்கவும் கால்சியம் கார்பனேட் மற்றும் சோடியம் கார்பனேட் இரண்டும் சேர்க்கப்படுகிறது.

 இந்த இரண்டு பொருட்களும் சேர்க்கப்பட்ட பிறகு கண்ணாடி பொருட்களை தயாரிப்பதற்கான நீர்ம நிலை கிடைத்து விடும். அவ்வாறு கிடைத்த நீர்ம நிலையினை எந்த வடிவத்தில் நமக்கு கண்ணாடி பொருட்கள் தேவையோ அதற்கு ஏற்றவாறு உள்ள அளவுகோளில் ஊற்றி அதற்கு ஏற்றவாறு கண்ணாடி பொருட்கள் தரியாரிக்கப்படுகிறது. 

பெரும்பாலான கண்ணாடி பொருட்கள் தயாரிப்பதற்கு இத்தகைய கண்ணாடி தயாரிக்கும் முறை தான் பின்பற்றப்படுகிறது.

ரயிலில் பயணம் செய்யும் போது தண்டவாளத்தின் பக்கத்தில் ஏன் இந்த பெட்டி இருக்குனு தெரியுமா

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Learn 
Advertisement