வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நரைமுடி நிரந்தரமாக கருப்பாக ஹேர் டை வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!

Updated On: February 24, 2024 11:33 AM
Follow Us:
Hair dye for gray hair permanently black
---Advertisement---
Advertisement

Hair Dye for Gray Hair Permanently Black

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றிய சமூகத்தில் பெரும்பாலான நபர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகளில் ஓன்று தான் இந்த நரைமுடி பிரச்சனை. குறிப்பாக சிறிய வயதினருக்கும் இந்த பிரச்சனை மிக எளிதாக வந்துவிடுகிறது. இதற்கு காரணம் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

பொதுவாக கூறப்படும் காரணம் என்னவென்றால் ஒழுங்கலற்ற வாழ்கை முறை, உணவு முறை, ஒழுங்கற்ற கூந்தல் பராமரிப்பு, அதிக கெமிக்கல் நிறைந்த பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்து என்று இது போன்ற காரணங்களை சொல்லலாம். நரைமுடி நிரந்தரமாக கருமையாக வேண்டும் என்று பெயர் இப்போதெல்லாம் கடைகளில் உள்ள அதிக கெமிக்கல் நிரைந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றன.

இதன் விளைவிக்க பெரும்பாலான பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றன. இன்றிய பதிவில் நாம் தெரிந்துகொள்ள போவது என்னவென்றால் நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக வீட்டிலேயே செய்ய கூடிய ஹேர் டை தயார் செய்யும் முறையை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்.. ஆக பதிவை முழுமையாக படித்து அந்த ஹேர் டையை எப்படி தயார் செய்ய வேண்டும், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று என்று இப்பொழுது நாம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கண்கள் ஆரோக்கியமாக இருக்க 10 எளிய வழிகள்..!

நரைமுடி நிரந்தரமாக கருப்பாக ஹேர் டை:

தேவையான பொருட்கள்:

  • கருஞ்சீரகம் – இரண்டு ஸ்பூன்
  • வெந்தயம் – இரண்டு ஸ்பூன்
  • டீத்தூள் – இரண்டு ஸ்பூன்
  • காபி தூள் – இரண்டு ஸ்பூன்
  • பாதாம் – ஐந்து
  • அவுரி பவுடர் – இரண்டு ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் – தேவையான அளவு

ஹேர் டை செய்முறை:

Hair dye for gray hair permanently black

அடுப்பில் ஒரு இரும்பு கடைய வைத்து அதில் இரண்டு ஸ்பூன் கருஞ்சீரகம், இரண்டு ஸ்பூன் வெந்தயம், இரண்டு ஸ்பூன் டீத்தூள், இரண்டு ஸ்பூன் காபி பவுடர் மற்றும் ஐந்து பாதாமை உடைத்து சேர்த்துக்கொள்ளுங்கள்.

பிறகு பொருட்கள் அனைத்தும் நன்கு கருகும் வரை வறுக்க வேண்டும். பொருட்கள் அனைத்தும் நன்கு கருகிய பிறகு அடுப்பை அணைத்து வறுத்த பொருட்களை நன்கு ஆறவிடவும்.

பிறகு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பவுடர் போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அரைத்த இந்த பவுடரை ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து பயன்படுத்தலாம்.

உங்கள் தலை முடிக்கு தேவையான அளவு அந்த அரைத்த பவுடரை எடுத்துக்கொள்ளுங்கள்,

உதாரணத்திற்கு ஒரு ஸ்பூன் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் பவுடரில் ஒரு ஸ்பூன் அவுரி பவுடரை சேர்க்க வேண்டும், பின்பு அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் அல்லது தேங்காய் எண்ணெய் செய்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

அவ்வளவு தான் ஹேர் டை தயார், இந்த ஹேர் டையை தலையில் எங்கெல்லாம் நரைமுடி உள்ளதோ அங்கெல்லாம் நன்றாக அப்ளை செய்து குறைந்தது ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும்.

பிறகு தலை முடியை எப்பொழுதும் போல அலசவும் இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வந்தாலே போதும் நரைமுடி நிரந்தரமாக கருமையாக மாறிவிடும்.

இந்த ஹேர் டை எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது, இருப்பினும் சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஹேர் டையை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது,

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஐந்து பாதாம் போதும் வெள்ளை முடியை நிரந்தரமாக கருமையாக..!

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

wart removal home remedies in tamil

மருக்களை அடியோடு அகற்றுவது எப்படி.?

Tan Removal Home Remedies in Tamil 

Summer சீசனில் முகம் கருத்து போய்விடுகிறதா..? ரொம்ப Simple இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க..!

ஒரே நாளில் உங்களின் முகம் பளிச்சென்று மாற சந்தனத்துடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து தடவுங்க..!

How to Use Coconut for Hair Growth and Thickness in Tamil

முடியின் அதிவேக வளர்ச்சிக்கு தேங்காயை இப்படி தலைமுடிக்கு பயன்படுத்துங்க.!

Sunken Eyes Home Remedies in Tamil

கண்ணிற்கு கீழே குழி விழுந்தது போல் இருக்கிறதா..? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள்..!

homemade shampoo prepare in tamil

ஷாம்பு தயாரிப்பது எப்படி.?

Verkuru Neenga

வெயில் காலத்தில் உடலில் அதிக வியர்க்குரு வருகிறதா.? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Diet Food for Weight Loss in Tamil

2 வாரத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க டயட் சார்ட் இதோ..

beauty tips for face at home for glowing skin in tamil

ஒரே வாரத்தில் சருமம் பளபளப்பாக மாற வீட்டு அழகுகுறிப்புகள்…