முடி கொட்டுவதை நிறுத்துவது எப்படி – Hair Fall Reduce Home Remedies in Tamil
பொதுவாக நமக்கு அழகு முடி தான். அது பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக இருந்தாலும் சரி முடி கொஞ்சம் கொட்டினாலும் முடி கொட்டுகிறது இதற்கு நாம் என்ன செய்வது என்று கேள்வி வந்துவிடும் அல்லவா..? அந்த அளவிற்கு முடி கொட்டுவதை கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. சரி இந்த முடி வயதானவர்களுக்கு கொட்டினால் கூட வயது ஆகிவிட்டது முடி கொட்டுகிறது என்று சொல்ல முடியும். ஆனால் இங்கு அப்படி நடப்பது இல்லை. பெரியவர்களை விட சிறிய குழந்தைகளுக்கு தான் அதிகமாக முடி கொட்டுகிறது.
ஏனென்றால் இந்த காலத்து பிள்ளைகளுக்கு முடி கொட்டுவதற்கு காரணம் சத்துக்கள் நிறைந்த பொருட்களை சாப்பிடாமல் இருப்பது தான். அதேபோல் அவர்களுக்கு உடலில் தேவையான அளவு சத்துக்கள் இல்லை என்றால் முடி கொட்டும். அதேபோல் முடிக்கு தேவையான சத்துக்களையும் நம்முடைய உடல் அதற்கு கொடுக்காமல் இருக்கும். முடியை நாம் தான் சரியாக பார்த்துக் கொள்ளவேண்டும். அப்போது தான் முடி கொட்டாமல் இருக்கும். வளரவும் ஆரம்பம் ஆகும். சரி இந்த முடி கொட்டுவதை தடுக்க வழிகள் இல்லையா என்றால் கண்டிப்பாக உண்டு. ஆனால் இதனை நாம் தொடர்ந்து செய்தால் முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பம் ஆகும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Hair Fall Reduce Home Remedies in Tamil:
வெங்காயம்: இந்த வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளது. இது நம்முடைய முடி கொட்டுவதை தவிர்க்கும். அதனால் நாம் இன்று 2 பல்லாரி வெங்காயம் எடுத்துக் கொள்வோம். அதனை தோல் சீவி அதனை சிறிய துண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அதன் கூடவே வீட்டில் இருக்கும் தயிர் எடுத்துக் கொள்ளவும். இது முடியின் வேர்களை வலிமையாக வளர உதவி செய்யும்.
அடுத்து அதன் கூடவே ஆமணக்கு எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். அதனை 50 ML எடுத்துக் கொள்ளவும். இது நம்முடைய முடியை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்சி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்பு அரைத்த பொருட்களை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். ஏனென்றால் நமக்கு அந்த சாறு இருந்தால் போதுமானது.
பயன்படுத்தும் முறை:
நீங்கள் எப்போதும் ஹேர் பேக் அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால், முதல் நாள் தலையில் எண்ணெய் வைத்துகொள்ளவும். மறுநாள் காலையில் தலை முடியை சிக்கு இல்லாமல் எடுத்துக்கொண்டு இரண்டு பாதியாக பிரித்து கொள்ளவும். அதன் பின்பு அப்படியே அப்ளை செய்யலாம். அல்லது காட்டன் துணியால் அப்ளை செய்யலாம். இப்படி வாரத்தில் ஒரு நாள் செய்தால் போதும். முடி கொட்டுவது நின்று புது முடியை வளர செய்யும்.
அனைத்து முடியையும் ஒரே மாதிரி அடர்த்தியாக வளர வைக்க இது ஒன்று போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |