உங்க முடி ரொம்ப குட்டியா இருக்குன்னு கவலைப்படுறீங்களா..! அப்போ நீளமாக வளர இதை மட்டும் உங்க முடிக்கு தேயுங்கள்..!

Advertisement

Hair Pack For Hair Growth Homemade in Tamil

அனைவருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் பெரும் பிரச்சனை முடி உதிர்தல் பிரச்சனை தான். பெண்களுக்கு முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருந்தால் தான் அழகு என்பார்கள். ஒரு சிலருக்கு முடி கட்டுக்கடங்காமல் வளர்ந்து இருக்கும். இதனை பார்க்கும் போது நமக்கு மட்டும் ஏன் முடி நீளமாக வளரவில்லை என்று நினைப்போம். முடி உதிர்தலை தடுக்க என்னதான் பல்வேறு பொருட்கள் இருந்தாலும் இயற்கையான பொருட்களுக்கு ஈடாகாது. எனவே இப்பதிவில் குட்டையாக இருக்கும் முடியை நீளமாக வளரவைக்கும் இயற்கையான ஹேர் பேக் எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம். முடியை நீளமாக வளரவைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Make Hair Pack at Home in Tamil:

ஹேர் பேக் செய்ய தேவையான பொருட்கள்:

  • செம்பருத்தி இலை- முடிக்கு தேவையான அளவு
  • பால்- தேவையான அளவு
  • வெந்தயம்- 50 கிராம்
  • பாசிப்பயிறு- 50 கிராம்

ஹேர் பேக் செய்யும் முறை:

ஸ்டேப்- 1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள். இதில் செம்பருத்தி இலை மற்றும் பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

 hibiscus hair pack for hair growth in tamil

ஸ்டேப்- 2

பிறகு, இதனை ஒரு காட்டன் துணியில் சேர்த்து நன்றாக பிழிந்து ஒரு கிண்ணத்தில் வடிகட்டி சாற்றினை எடுத்து கொள்ளுங்கள்.

10 நிமிடத்தில் உங்களின் முகம் பொலிவு பெற பாலுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க போதும்.

ஸ்டேப்- 3

அடுத்து, வெந்தயம் மற்றும் பாசிபயிரினை சமமான அளவில் எடுத்து கொள்ளுங்கள். இதனையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

 home remedies for hair growth and thickness in tamil

ஸ்டேப்- 4

இப்போது தயார் செய்து வைத்துள்ள செம்பருத்தி லிக்யூடு மற்றும் அரைத்து வைத்துள்ள வெந்தயம், பாசிப்பயிறு பவுடர் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலந்து எடுத்து கொள்ளுங்கள்.

 best hair pack for hair growth in tamil

இப்போது முடியை வளரவைக்கும் ஹேர் பேக் தயார்.!

அப்ளை செய்யும் முறை:

முதலில் தலையில் எண்ணெய் வைத்து முடியை சிக்கு இல்லாமல் சீவி எடுத்து கொள்ளுங்கள். பிறகு, முடியை இருபுறமாக பிரித்து தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கினை ஒவ்வொரு புறமாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

முடி நீளமாக வளர

அதாவது ஹேர் பேக்கினை முடியின் வேர்க்கால்கள் முதல் முடியின் நுனிப்பகுதி வரை அப்ளை செய்து கொள்ளுங்கள். இதனை 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு தலை அலசி விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம், முடி வளராமல் தடுக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் நீங்கி முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும். இதனை நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்தி வரலாம்.

கையில கொத்து கொத்தா முடி வருவதை நிறுத்த வெறும் வெந்தயம் மட்டும் போதும்

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 
Advertisement