Verkuru Neenga
வெயில் காலம் வந்து விட்டாலே உடலில் பல சரும பிரச்சனைகளும் வந்து விடுகிறது. அப்படி வரும் பிரச்சனைகளில் பெரும் பிரச்சனை வேர்க்குரு தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வேர்க்குரு வந்துவிடுகிறது. இதனால் கடைகளில் விற்கும் சில பவுடர்களை வாங்கி பயன்படுத்துவோம். எனவே பவுடர் இல்லாமல் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து வேர்க்குருவை போக்குவது எப்படி என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். பொதுவாக எந்தவொரு பிரச்சனைக்கும் மற்ற பொருட்களை விட இயற்கை பொருட்கள் நிரந்தர தீர்வு அளிக்கும். ஓகே வாருங்கள் இயற்கை பொருட்களை பயன்படுத்தி வேர்க்குருவை போக்குவது எப்படி என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
How To Get Rid of Heat Rashes on Body in Tamil:
முல்தானி மெட்டி:
ஒரு கிண்ணத்தில் ஒரு 1 ஸ்பூன் அளவிற்கு முல்தானி மெட்டி பவுடரை எடுத்து கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு வரும்வரை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது, வியர்க்குரு உள்ள இடத்தை நன்றாக தண்ணீர் வைத்து கழுவி துடைத்து விட்டு, தயார் செய்து வைத்துள்ள முல்தானி பேஸ்டினை அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவி விடுங்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் வியர்க்குரு எளிதில் நீங்குவதுடன் உடலில் வெயிலினால் ஏற்பட்ட எரிச்சல், அரிப்பு போன்றவையும் நீங்கும்.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய இதை செய்தால் போதும்.. ஒரு கரும்புள்ளி கூட இருக்காது ….
வேப்பிலை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். இதில் 1 கைப்பிடி அளவிற்கு வேம்பு இலைகளை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.
பிறகு, இத்தண்ணீர் நன்றாக குளிர்ந்ததும் தண்ணீரை வடுகட்டி வியர்க்குரு உள்ள பகுதிகளில் அப்ளை செய்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
வேப்பிலை ஒரு கிருமி நாசினி. எனவே இதனை பயன்படுத்தும்போது உடலில் வியர்க்குரு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
கற்றாழை:
கற்றாழையின் தோல் பகுதியை நீக்கிவிட்டு உட்புறத்தில் இருக்கும் ஜெல்லினை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். இந்த கற்றாழை ஜெல்லினை உடலில் வியர்க்குரு உள்ள பகுதிகளில் அப்ளை செய்து 1/2 மணிநேரம் அப்படியே வைத்து பிறகு, குளிர்ந்த நீரை கொண்டு கழுவி விடுங்கள்.
இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வேர்க்குரு விரைவில் குணமாகும்.
காலில் உள்ள கருமை நிறம் நீங்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் கலந்து போடுங்க..
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |