உங்கள் ட்ரையான முடியை சாப்டாக்க இந்த ஹேர் கண்டிஷனரை பயன்படுத்துங்கள்.!

Advertisement

Natural Hair Conditioner At Home After Shampoo

அனைவருமே கூந்தலை பராமரிக்க பல வழிகளை மேற்கொண்டு வருகிறோம். கூந்தல் மென்மையாகவும் நீளமாகவும் இருப்பதற்கு கடைகளில் கிடைக்கும் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இவை அனைத்தும் நம் தலைமுடிக்கு நிரந்தரமானவை அல்ல என்பது நம்மில் பலபேருக்கு தெரிவதில்லை. எனவே எந்தவொரு பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு அளிப்பது இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்கள் மட்டுமே. எனவே, அந்தவகையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் கண்டிஷர் தயாரிப்பது எப்படி என்பதையும் அதனை பயன்படுத்தும் முறையினையும் இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

How To Make Hair Conditioner At Home in Tamil:

 natural hair conditioner at home after shampoo in tamil

தேவையான பொருட்கள்:

  • ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்
  • கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்

இரண்டையும் நன்றாக கலக்கவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் உங்கள் முடியின் அளவிற்கு ஏற்ற அளவில் கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். 

 how to make hair conditioner at home in tamil

10 நாட்களுக்கு இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நீங்களே ஆச்சிரியபடுகிற அளவுக்கு தலைமுடி வேகமாக வளரும்..!

பயன்படுத்தும் முறை:

இப்போது இவற்றை நன்றாக கலந்து கொண்டு, முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனிபகுதி வரை நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

 how to make natural hair conditioner at home in tamil

அதன் பிறகு, ஒரு துண்டினை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை போர்த்தி விடவும்.

பிறகு இறுதியாக, தலைமுடியை எப்போதும் போல் ஷாம்பு போட்டு சுத்தம் செய்து விடவும்.

முக்கிய குறிப்புகள்:

எண்ணெய் பசையுள்ள தலைமுடியில் இந்த ஹேர் கண்டிஷரை பயன்படுத்த கூடாது.

உலர்ந்த தலைமுடியில் பயன்படுத்த கூடாது. ஈரமாக உள்ள தலைமுடியில் மட்டுமே அப்ளை செய்ய வேண்டும்.

கண்டிஷரை தயாரித்தவுடனே பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வைத்து விட்டு பிறகு பயன்படுத்த கூடாது.

முகம் தக தகன்னு மின்ன தக்காளியை இப்படி பயன்படுத்தி பாருங்க..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement