ஆண்களின் முடி உதிர்வு முதல் வழுக்கை வரை சரி செய்ய ஒரே மூலிகை..

Advertisement

Jatamansi Benefits for Hair in Tamil

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே முடி உதிர்வு பிரச்சனைக்கு ஆளாகுகிறார்கள். முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த எண்ணெய், மற்றும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் முடி உதிர்வு பிரச்சனை அப்போது வேண்டுமானால் சரியாகலாம். ஆனால் நாளடைவில் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். அதனால் இயற்கை மூலிகைகளை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் ஜடமான்சி முடியின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம்.

முடி உதிர்வு:

ஜடமான்சி முடியை பலமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது, மேலும் உச்சந்தலை முதல் வேர் வரை பலமாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.  இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்  உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகின்றன, இது மயிர்க்கால்களைத் தூண்டி முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

முடி வெடிப்பதை தடுத்து வேர் பகுதி பலமாக வளர்வதற்கு உதவுகிறது.

நீளமான முடி வளர்ச்சிக்கு சில பாட்டி வைத்தியம்….

நரை முடி:

சடாமாஞ்சில் முடி பயன்கள்

ஜடமான்சியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் முன்கூட்டியே நரைப்பதை தடுக்கிறது. இதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் பொடுகு பிரச்சனையை சரி செய்கிறது. முடிக்கு தேவையான சத்துக்களை வழங்கி முடி பளபளப்பாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது.

இயற்கையான நறுமணம்:

ஜடாமான்சியில் ஒரு இனிமையான, மர வாசனை உள்ளது, இது செயற்கை வாசனை திரவியங்கள் தேவையில்லாமல் முடிக்கு இயற்கையான வாசனையை வழங்குகிறது. மேலும் இவை தலையில் உள்ள எரிச்சல் பிரச்சனையை சரி செய்வதற்கும் உதவுகிறது.

எப்படி பயன்படுத்துவது.?

சடாமாஞ்சில் முடி பயன்கள்

பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். முடி உதிர்வைத் தடுக்கவும், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் அதே வேளையில் முடியின் தரத்தை மேம்படுத்துவதில் திறம்பட உதவுவதாக அறியப்பட்ட அழகிய இமயமலையின் சிறந்த மூலிகைகளில் இதுவும் ஒன்றாகும். ஜடாமான்சி மூலிகை வேர், பொடி மற்றும் எண்ணெய் வடிவில் சந்தையில் கிடைக்கிறது.

ஜடமான்சி எண்ணெயை எடுத்து அதில் தேங்காய் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை நீங்கள் தலைக்கு தடவ வேண்டும். உங்களுக்கு அதிகமான முடி உதிர்வு இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தடவ வேண்டும்.

ஜடாமான்சி தூளை எடுத்து அதில் பாதாம் எண்ணெய், அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இதனை தலை முடி முழுவதும் அப்ளை செய்து 15 நிமிடத்தும் வைத்திருந்து அதன் பிறகு ஷாம்புவை பயன்படுத்தி தலை தேய்த்து குளிக்க வேண்டும்.

அடர்த்தியான மற்றும் கருமையான தாடி மற்றும் மீசை 1 வாரத்தில் வளர இதை சாப்பிடுங்கள் …..

இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள்

 

Advertisement