Karumpulli Neenga Enna Seiya Vendum in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் காரணமாக ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி பருக்கள் வருவது சகஜமான ஒரு விஷயமாகிவிட்டது. அப்படி வரும் பருக்கள் நீங்கினாலும் அவைகளால் ஏற்படும் கரும்புள்ளிகள் உங்களின் முகத்தின் பொலிவை குறைக்கிறது. அப்படி உள்ள கரும்புள்ளிகளை போக்குவதற்காக நாமும் பலவகையான முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். ஆனால் அவையாவும் நாம் நினைத்த அளவிற்கு நல்ல பலனை அளித்திருக்காது.
அப்படி உங்களின் முகத்தில் நீண்ட நாட்களாக உள்ள கரும்புள்ளிகளை கூட எளிதில் போக்குவதற்கு உதவும் ஒரு குறிப்பினை பற்றி தான் விரிவாக இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்னென்ன குறிப்பு என்று அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்:
பொதுவாக நமது முகத்தில் ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் நமது மனம் மிக மிக கஷ்ட்டப்படும். ஆனால் இன்றைய சூழலில் நமது முகத்தில் பலவகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அப்படி ஏற்படும் பல பிரச்சனைகளில் ஒன்றான கரும்புள்ளியை போக்க உதவு ஒரு குறிப்பினை பற்றி இங்கு காணலாம் வாங்க..
இதை ஒரு சொட்டு தடவுங்க போதும் முகம் பளிச்சென்று மாறும்
தேவையான பொருட்கள்:
- பால் – 2 டேபிள் ஸ்பூன்
- உருளைக்கிழங்கு – 1 சிறியது
- வேப்பிலை – 1 கைப்பிடி அளவு
- கிராம்பு – 10
- தண்ணீர் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 1 உருளைக்கிழங்கினை நன்கு சுத்தம் செய்துவிட்டு அதனின் தோல்களை நீக்கிக் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு வேப்பிலை, 10 கிராம்பு மற்றும் 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பாலினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை உங்களின் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடம் கழித்து முகத்தை நன்கு குளிர்ந்த நீரை பயன்படுத்தி கழுவி கொள்ளுங்கள்.
இதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போக்கி நன்கு பொலிவு பெற தொடங்குவதை நீங்களே காணலாம்.
உங்க முகம் முதல் பாதம் வரை நிலவு போல் ஜொலிக்க இதை 1 டீஸ்பூன் தடவுங்க போதும்
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |