ந ன ண வேறுபாடு சொற்கள் – தெளிவான விளக்கங்கள் இதோ..

Mayangoli Sorkal in Tamil

ந ன ண வேறுபாடு சொற்கள் – Mayangoli Sorkal in Tamil

வணக்கம் நண்பர்களே.. பொதுவாக தமிழ் எழுத்துக்களில் ந, ன, ண ஆகிய எழுத்துக்கள் எந்தெந்த வார்த்தைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பம் பலருக்கு இருக்கும். அதாவது ரெண்டு சுழி ன வரவேண்டிய இடத்தில், மூன்று சுழி ண-வை பயன்படுத்துவோம். அதேபோல் மூன்று சுழி ண வர வேண்டிய இடத்தில் ரெண்டு சுழி ன-வை பயன்படுத்துவோம். இத்தகைய தவறை சிறிய குழந்தைகள் அதிகமாகவே செய்வார்கள். இவ்வாறு மயங்க வைக்கும் எழுத்துக்களுக்கு மயங்க மயங்களோ எழுத்துக்கள் என்று பெயரும் உண்டு. சரி இந்த பதிவில் ந ன ண வேறுபாடு சொற்கள் பற்றி பார்க்கலாம், அதன் மூலம் தங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.

ந ன ண வேறுபாடு – Mayangoli Words in Tamil

  • ட – ண டண்ணகரம் 
  • ற – ன றன்னகராம் 
  • த – ந   தந்நகரம் 

இது என்ன டண்ணகரம், றன்னகராம், தந்நகரம் அப்படினு யோசிப்பீங்க. இதை வைத்து நாம் எப்படி ந ன ண வேறுபாட்டை அறிந்துகொள்ள முடியும் என்றும் யோசிப்பிங்க. தமிழ் எழுத்துக்களில் உங்களுக்கு உயிர்மெய் எழுத்துக்கள் பற்றி தெரியும். க, ங, ச, ஞ, ட, ண த, ந, ப, ம, ய, ர, ல, வ, ழ, ள, ற, ன வரிசையில் க, ங, ச, ஞ-ற்கு அடுத்து ட ண எழுத்துக்கள் வரும் ஆகவே அதற்கு டண்ணகரம் என்றும், அதன் பிறகு த ந என்ற எழுத்துக்கள் வரும் ஆகவே அதற்கு தந்நகரம் என்றும், அதன் பிறகு ற, ன என்ற எழுத்துக்கள் வரும் ஆகவே அதற்கு றன்னகராம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் இப்படி மனப்பாடம் செய்வதன் மூலம் ந ன ண எழுத்துக்களில் உங்களுக்கு எந்த ஒரு குழப்பமும் வராது. சரி வாங்க இப்பொழுது ந ன ண வேறுபாடு சொற்கள் பற்றி கீழ் பார்க்கலாம்.

ந ன ண வேறுபாடு சொற்கள் – Mayangoli Letters in Tamil:

ந ன ண எழுத்துக்களை நாம் ரெண்டு சுழி ன, மூன்று சுழி ண என்று சொல்வது தவறு. டண்ணகரம், றன்னகராம், தந்நகரம் என்று சொல்லுங்கள். சரி டண்ணகரம் வரக்கூடிய சொற்களை இப்பொழுது பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்யுங்கள் மயங்கொலிச் சொற்கள்

டண்ணகரம் சொற்கள்:

மூன்று சுழி ண்-ஆன டண்ணகரத்தில் வரக்கூடிய சொற்கள்.

  • வண்டு
  • நண்டு
  • மண்டபம்
  • கண்டோம்
  • துண்டு
  • பண்டம்
  • திண்டாட்டம்
  • கொண்டாட்டம்
  • கண்ணோட்டம்
  • மண்டு
  • வண்டினம்

உதாரணம்:

இன்னமும் குழப்பம் சரியாகவில்லை என்றால் ஒரு எளிமையான உதாரணம் தருகிறேன் ட வரிசை எழுத்துக்கள் வரக்கூடிய சொற்களுக்கெல்லாம் ண என்ற எழுத்தான டண்ணகரம் வரவேண்டும். வ___டு இவற்றில் டு என்பது ட வரிசையில் வரக்கூடிய எழுத்துக்கள் ஆகும். ஆகவே உயிர்மெய் எழுத்து வரிசையில் ட என்ற எழுத்திற்கு அடுத்து ண என்ற எழுத்து வரும். ஆகவே வ___டு என்ற எழுத்திற்கு டண்ணகரமான மூன்றுசுழி ண் வர வேண்டும்.

றன்னகரம் சொற்கள்:

றன்னகரத்தில் வரக்கூடிய சொற்கள். இரண்டு சுழி ன என்பது றன்னகரம் ஆகும். இந்த றன்னகரம் வரக்கூடிய சொற்கள்.

  • தென்றல்
  • மன்றம்
  • சென்றான்
  • கொன்றான்
  • நன்றி
  • கன்று
  • நின்றான்
  • நின்று

உதாரணம்:

அதேபோல் ற வரிசை எழுத்துக்கள் வரக்கூடிய சொற்களுக்கெல்லாம் ன என்ற எழுத்தான றன்னகரம் வரவேண்டும். நி___று  இவற்றில் று என்பது ற வரிசையில் வரக்கூடிய எழுத்துக்கள் ஆகும். ஆகவே உயிர்மெய் எழுத்து வரிசையில் ற என்ற எழுத்திற்கு அடுத்து ன என்ற எழுத்து வரும். ஆகவே நி___று என்ற வார்த்தைக்கு. றன்னகரமான இரண்டு சுழி ன் வரவேண்டும்.

தந்நகரம் சொற்கள்:

மூன்றாவதாக தந்நகரம் எனப்படும் ந் என்ற எழுத்துக்கள் எங்கெல்லாம் வரும் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.

  • பந்தம்
  • வெந்தயம்
  • மந்தை
  • பந்து
  • கந்தல்
  • தந்தம்
  • தந்தது
  • மந்திரம்
  • வந்தோம்
  • வந்தது
  • வெந்தது

உதாரணம்:

அதேபோல் த வரிசை எழுத்துக்கள் வரக்கூடிய சொற்களுக்கெல்லாம் ந என்ற எழுத்தான தந்நகரம் வரவேண்டும். ப___து இவற்றில் து என்பது த வரிசையில் வரக்கூடிய எழுத்துக்கள் ஆகும். ஆகவே உயிர்மெய் எழுத்து வரிசையில் த என்ற எழுத்திற்கு அடுத்து ந என்ற எழுத்து வரும். ஆகவே ப___து என்ற வார்த்தைக்கு. தந்நகரமான ந் என்ற எழுத்து வர வேண்டும்.

இப்பொழுது ந ன ண எழுத்துக்களை எங்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு தெளிவு உங்களுக்கு கிடைத்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி வணக்கம்..!

மேலும் சொற்கள் வரிசை சொற்களை பார்க்க இந்த கிளிக் செய்யுங்கள்–> சொற்கள்