850 Square Feet Cost in Tamil
சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. இதற்காக பலரும் ஓடி ஓடி சம்பாதித்து சேர்த்து வைக்கிறார்கள். சேர்த்து வைத்த பணத்தில் வீட்டை கட்ட ஆரம்பிக்கிறார்கள். அதற்கான எந்த பிளானும் இல்லாமல் கட்ட ஆரம்பிக்கிறார்கள். அதாவது ஒரு வீடு கட்ட போகிறீர்கள் என்றால் எத்தனை ரூம் வேண்டும், கிட்சன் எப்படி இருக்க வேண்டும் டைல்ஸ் எந்த டிசைன் ல வேணும்னு தான் பிளான் பண்றீங்க. ஆனால் அவை மட்டும் முக்கியமில்லை நாம் எத்தனை சதுரடியில் வீடு கட்ட போகிறோம் அதற்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படும், அதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கணக்கு போட்டு கட்ட ஆரம்பிக்க வேண்டும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
850 சதுரடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்:
செங்கல் எவ்வளவு தேவைப்படும்:
850 சதுரடியில் வீடு கட்டுவதற்கு 20,000 செங்கல் தேவைப்படும். ஒரு செங்களின் விலையானது 11 ரூபாய் என்றால் 20,000 செங்களின் மொத்த விலை 2,20,000 ரூபாய் ஆகும்.
ஜல்லி:
20 mm Aggregate ஜல்லி 1 யூனிட் விலை 3000 ரூபாய் ஆகும். 850 சதுரடிக்கு 8 யூனிட் ஜல்லி தேவைப்படும். அதனுடைய விலை 24,000 ஆகும்.
40 mm Aggregate ஜல்லியின் 1 யூனிட் விலை 2800 ரூபாய் ஆகும். 850 சதுரடிக்கு 3 யூனிட் ஜல்லி போதுமானது அப்படி என்றால் அதனுடைய விலை 8400 ரூபாய் ஆகும்.
மணல்:
வீடு கட்டுவதற்கு இரண்டு விதமான மணல் காணப்படும். அது M சாண்ட் மணல், P சாண்ட் மணல் ஆகும்.
M சாண்ட் மணல் யூனிட் விலை 38,000 ஆகும். அதேபோல் P சாண்ட் மணல் 1 யூனிட் 5000 ரூபாய் ஆகும்.
2 பெட்ரூம் உடன் கூடிய வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்..
நமக்கு 850 சதுர அடியில் வீடு கட்டினால் M சாண்ட் மணல் 18 யூனிட் தேவைப்படும். அதேபோல் P சாண்ட் மணல் 4 யூனிட் தேவைப்படும். இந்த இரண்டு மணலின் விலையையும் சேர்த்து 4,76,000 ரூபாய் செலவு ஆகும்.
கம்பி:
மொத்தமாக 850 சதுரடிக்கு 4.3/4 டன் கம்பிகள் தேவைப்படும். அப்படி என்றால் எவ்வளவு செலவு ஆகும். ஒரு டன் விலையானது 75,000 ரூபாய் என்றால் 4.3/4 டன் எவ்வளவு என்றால் 3,18,750 ரூபாய் ஆகும்.
சிமெண்ட் மூட்டை:
850 சதுரடியில் வீடு கட்டுவதற்கு 450 சிமெண்ட் மூட்டைகள் தேவைப்படும். ஒரு மூட்டையின் விலை 500 ரூபாய் என்றால் 450 சிமெண்ட் மூட்டைக்கு எவ்வளவு 2,25,000 ரூபாய் செலவு ஆகும்.
இதை தவிர நிறைய மற்ற செலவுகள் இருக்கும். வீட்டில் டைல்ஸ், ஜன்னல் மாட்டுவது என்று நிறைய உள்ளது. மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துமே உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும் என்பதற்காக உள்ளது. ஆகவே 850 சதுரடியில் வீடு கட்டுவதற்கு தோராயமாக 22 லட்சம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
2BHK கூடிய வீடு கட்டுவதற்கு இவ்வளவு கம்மியான பணத்துல கட்டி விடலாமா
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |