10 பேருக்கு அதிரசம் செய்ய தேவையான பொருட்களின் அளவுகள் எவ்வளவு தெரியுமா.?

Advertisement

Adhirasam Ingredients in Tamil

சமையலில் அளவு என்பது மிகவும் முக்கியம். அதாவது, எந்த பொருளை எவ்வளவு போட வேண்டும் என்பதை பெண்கள் அனைவரும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். முக்கியமாக பலகாரம் செய்கின்றோம் என்றால் அதற்கு தேவையான பொருட்களை சரியான அளவில் போட வேண்டும். அப்போதுதான் பலகாரம் நன்றாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த தீபாவளிக்கு நீங்கள் 10 பேர் சாப்பிடும் அளவிற்கு அதிரசம் செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு தேவைப்படும் பொருட்களின் அளவுகள் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

10 பேருக்கு அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்:

 அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்

  • வெல்லம் – 625 கிராம் 
  • அரிசி மாவு – 625 கிராம் 
  • ஏலக்காய் – 2 ஸ்பூன் 
  • எண்ணெய் – அதிரசம் பொரிப்பதற்கு தேவையான அளவு 
  • தண்ணீர் – தேவைக்கேற்ப

7 நபருக்கு வீட்டிலேயே ஆப்பம் செய்ய தேவைப்படும் பொருட்களின் அளவு எவ்வளவு..?

அதிரசம் மாவு செய்யும் முறை:

முதலில், அடிப்பகுதி கனமாக இருக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளுங்கள்.

இதில் வெல்லத்தை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு பாகு காய்ச்சி கொள்ளுங்கள்.

இப்போது, பெரிய அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அரிசி மாவினை சேர்த்து, தயார் செய்து வைத்துள்ள வெல்ல பாகினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி விடுங்கள்.

அடுத்து இதனுடன், ஏலக்காயை இடித்து சேர்த்து கொள்ளுங்கள். இந்நிலையில் மாவினை நன்கு கலந்து 7 மணி முதல் 8 மணிநேரம் வரை அப்படியே வைத்து அதன் பிறகு எடுத்து பயன்படுத்த வேண்டும்.

அதன், பிறகு சிறு சிறு உருண்டைகளாக தட்டி எண்ணெய்யில் போட்டு எடுத்தால் அதிரசம் தயார்..!

இந்த தீபாவளிக்கு 50 முறுக்கு செய்ய எவ்வளவு அரிசி மாவு தேவைப்படும்

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement