1000 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி.?
பொதுவாக நன்கு சமைக்க தெரிந்தவர்களுக்கே ஒரு 10 அல்லது 15 நபர்களுக்கு சேர்த்து சமைக்க வேண்டும் என்றால் கை கால் உதறும். காரணம் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் சமைத்த கை கொஞ்சம் கூடுதலாக சேமிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக பதட்டம் ஏற்படும். ஏன் என்றால் அதற்கு அதிகமாக சமைக்க வேண்டும், எவ்வளவு பொருட்களை பயன்படுத்த வேண்டும் ஆனால் அதற்கு எவ்வளவு போர்டுகளை சரியான அளவில் சேர்க்க வேண்டும் என்று தெரியாது.
இதன் காரணமாகவே பொதுவாக அனைவருக்குமே கொஞ்சம் பதற்றம் காணப்படம். அதுவே 1000 பேருக்கு சமைக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு அரிசி தேவைப்படும், எவ்வளவு மசாலா பொருட்கள் தேவைப்படும் என்பதில் நிறைய குழப்பம் ஏற்படும். பொதுவாக ஏதாவது பெரிய விழாவிற்கு தான் 1000 நபர்களுக்கு சமைப்பார்கள். சரி இந்த பதிவில் 1000 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்வதற்கு எவ்வளவு சிக்கன் மற்றும் அரிசி தேவை என்பது குறித்த விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
1000 பேருக்கு சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் – Chicken Biryani for 1000 Persons Ingredients in Tamil:
ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சிக்கனில் பிரியாணி செய்தால் 5 முதல் 6 பேர் வரை சாப்பிடலாம். 1000 பேருக்கு என்றால் 180–200 கிலோ வரை தேவைப்படலாம். ஆயிரத்தில் குழந்தைகளும் இருந்தால் 160- 170 கிலோவே போதுமானதாக இருக்கும்..
- அரிசி 120 கிலோ
- சிக்கன் 120 கிலோ
- மிளகாய் தூள் 1.200 கிலோ கிராம்
- வெங்காயம் 40 கிலோ
- தக்காளி 30 கிலோ
- எண்ணெய் 22 லிட்டர்
- தயிர் 22 லிட்டர்
- அரைத்த இஞ்சி விழுது 10 கிலோ
- அரைத்த பூண்டு விழுது 10 கிலோ
- பச்சை மிளகாய் 1.50 கிலோ
- இலவங்கப்பட்டை – 1 கிலோ
- ஏலக்காய் – 1 கிலோ
- கிராம்பு – 1 கிலோ
- பெருஞ்சீரகம் விதை தூள் – 1 கிலோ
- மஞ்சள்தூள் – 500 கிராம்
- சீரகப் பொடி- 1 கிலோ
- கொத்துமல்லி தழை- கிலோ
- புதினா- 1 & ½ கிலோ
- மிளகாய் தூள் – 1 & ½ கிலோ
- முந்திரி பருப்பு – 1 & ½ கிலோ
- நெய் – 1 & ½ கிலோ
- உப்பு – 8 பாக்கெட்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
100 பேருக்கான பிரியாணி செய்ய பொருட்களின் அளவுகள் தெரியவில்லையா..? அப்போ தெரிஞ்சிக்கோங்க
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |