Redmi 9 Mobile Phone Details in Tamil
இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருமே மொபைல் போன் பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் மொபைல் போன் பற்றிய முழுவிவரங்களும் நமக்கு தெரியுமா என்றால் இல்லை என்பது தான் உண்மை. அதனால் உங்களுக்கு பயன்படும் வகையில் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மொபைல் போன் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய பதிவில் நம்மில் பலருக்கும் பிடித்த ஒரு மொபைல் போனான Redmi 9 போன் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Redmi 9 Phone Details in Tamil:
பல ஆண்டுகளாக குறைந்த விலை ஸ்மார்ட் கைபேசி சந்தையில் Xiaomi-ன் Redmi தொடர் கைபேசிகள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக Redmi 9 கைபேசி மாடல் பொதுவாக ரூபாய் 10,000/- க்கு குறைவான மற்றும் அதற்கு சற்று அதிகமான விலையில் தான் இருக்கும்.
அதனால் இதனை அதிக நபர்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே அதனின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக இங்கு காணலாம்.
Redmi 9 கைபேசியின் சிறப்பம்சங்கள்:
இந்த மொபைல் Android 10 MIUI 11 ல் இயங்குகின்றது. இதன் வடிவமைப்பு மற்றும் டிஸ்ப்ளே 20:9 Aspect ratio உடன் கூடிய 6.53-inch IPS LCD Dot Drop டிஸ்ப்ளே உள்ளது. Redmi 9-ன் ஸ்கிரீன் Resolution 1080 x 2340 Pixels ஆகும்.
Redmi 9-ல் பிளாஸ்டிக்கிலான பின்பகுதி உள்ளது. மேலும் இதன் பின்பகுதியில் கேமராவின் கீழ் பகுதியில் Fingerprint Scanner உள்ளது.
இதில் Dual Plus Hexa Core MediaTek Helio G80 Processor உடன் இணைந்து 3GB/4GB RAM மற்றும் 32GB/64GB உட்புற சேமிப்பு (Internal Storage) வசதி உள்ளது.
இதையும் படித்துப்பாருங்கள்=> விரைவில் Vivo S16 மொபைல் ஆனது அதிரடியான அம்சங்களுடன் வரவிருக்கிறது தெரியுமா..?
இந்த உட்புற சேமிப்பினை Micro SD Card மூலம் 512 GB வரை விரிவாக்கம் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த Redmi 9-ல் 3.5 mm Headphone Jack உள்ளது. இந்த சிறப்பம்சம் இன்றைய நாட்களில் அறிமுகம் ஆகக் கூடிய பெரும்பாலான மொபைல் போன்களில் இருப்பதில்லை.
Redmi 9-ல் பின் பக்கத்தில் f/2.2 Aperture உடன்கூடிய 13 Mega Pixel கொண்ட முதன்மை கேமராவுடன் மேலும் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் இதில் 8 Mega Pixel கொண்ட செல்பி கேமராவும் உள்ளது.
மேலும் இதில் 8 MP Ultra Wide Angle Sensor, 5 MP Macro Lens மற்றும் ஒரு 2 MP Depth Sensor உள்ளது. Redmi 9-ல் 18 W Charging ஆதரவுடன் 5,020 mAh பேட்டரி மற்றும் Charging செய்வதற்கு Type-C Port-ம் உள்ளது.
இந்த மொபைல் கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு போன்ற நிறத்தில் கிடைக்கின்றது.
இதையும் படித்துப்பாருங்கள்=> 2023 -ல் இளைஞர்களை கவர வந்துவிட்டது…இந்த 5G ஸ்மார்ட் போன்..! அது என்னானு தெரிஞ்சுக்கோங்க..!
மேலும் இது தொடர்பான பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Mobile |