முயற்சி செய்தால் தான் வெற்றி
மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், அதற்கான முயற்சிகள் அனைத்தையும் எடுப்பது அவசியமானது. ஆசை மட்டும் இருந்தால் மட்டும் போதாது அதற்கான முயற்சிகள் இல்லையென்றால் அதில் நீங்கள் வெற்றியை அடைய முடியாது. மற்றவர்கள் சொல்வதை கேட்காமல் உங்களுக்கு செய்யணும் என்ற ஆசை இருந்தால் அதற்கான முயற்சிகளை நீங்கள் தாராளமாக செய்யலாம், முயற்சி செய்தால் தான் வெற்றி கிடைக்கும்.
Believe in yourself Motivation:
நீங்கள் செய்ய போகின்ற செயலை மற்றவர்களிடம் சொல்கிறீர்கள் என்றால் அவர்கள் உங்களை ஊக்கப்படுத்த மாட்டார்கள். அதற்கு மாறாக நான் இந்த செயலை செய்தேன் தோழி கிடைத்தது என்று கூறுவார்கள். மேலும் இதையெல்லாம் செய்து உன்னுடைய டைமை வேஸ்ட் பண்ணாதே என்று கூறுவார்கள்.
இதற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு என்றால் நம்முடைய விரல்கள் தான். நம்முடைய 5 விரல்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு விரலும் வெவ்வேறு அளவுகளில் தான் இருக்கும். ஒருவர் செய்து அதில் தோல்வியில் முடிந்தால் அவை உங்களுக்கும் தோல்வியில் தான் முடியும் என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால் அவர்கள் செய்த செயல் வேறு மாதிரி இருக்கும், நீங்கள் செய்தது வேறு மாதிரி இருக்கும்,. அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் தவறு கூட செய்திருக்கலாம். அதனால் மற்றவர்கள் சொல் கேட்டு உங்களுடைய முயற்சியை செய்யாமல் இருக்காதீர்கள்.
உங்களை மரியாதைக்குரிய நபராக மாற்றுவதற்கு இதனை கடைபிடிங்க
மேலும் மற்றவர்கள் பேச்சை கேட்டு அதனை செய்யாமல் இருப்பதற்கு பதிலாக அந்த செயலை நீங்கள் முயற்சி செய்து அதிலிருந்து தோல்வியை சந்தித்தால் கூட அதில் உங்களுக்கு அனுபவம் இருக்கும்.
எடுத்துக்காட்டிற்கு நீங்கள் upsc தேர்விற்கு prepare ஆக போகிறேன் என்று யாரிடமாவது கூறுங்கள். அவர்கள் அதற்கு உன்னலயெல்லாம் முடியாது, அதற்கெல்லாம் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
இதனை கண்டு சோர்ந்து விடாதீர்கள், ஏனென்றால் நீங்கள் வளருவது கண்டு அவர்களுக்கு பிடிக்கவில்லை என்று அர்த்தம். மற்றவர்கள் ஆயிரம் கூறுவார்கள் அவர்களை கூறுவதை காதில் கேட்காமல் உங்களால் முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடருங்கள். நீங்கள் செய்கின்ற செயலானது தோல்வியில் முடிந்தாலும் பரவாயில்லை ஏனென்றால் அதில் உங்களுக்கு என்ன தவறு செய்தோம் அடுத்த முறை அதனை எப்படி திருத்தி கொள்வது என்று தெரியும்.
உங்களின் திறமையை வெற்றியாக மாற்றுவதற்கு எது தேவை தெரியுமா.?
மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | பொதுநலம்.காம் |