வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வாழ்க்கையில் தொடர்ந்து தோல்வியை சந்திப்பவரா நீங்கள்.?

Updated On: January 5, 2024 4:07 PM
Follow Us:
failure life motivation in tamil
---Advertisement---
Advertisement

தோல்வியை சந்திப்பவரா நீங்கள்

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்பது அனைவரும் சந்திக்க கூடிய ஒன்று தான், வெற்றியை கண்டு தலைக்கணமும் கொள்ள கூடாது, தோல்வியை கண்டு சோர்ந்து விடவும் கூடாது. அதற்காக தொடர்ந்து தோல்வியே சந்தித்து கொண்டே இருந்தால் ஒரு மனது வெறுப்படையும். இதனால் வெற்றிக்கும் நமக்கும் தொலை தூரம் நமக்கு ஏதும் கிடைக்காது என்றெல்லாம் நினைக்கிறீர்கள். அதனால் இந்த பதிவில் ஐந்து விஷ்யங்களை பதிவிட்டுள்ளோம். அவை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

தோல்வியை நினைப்பது:

வெற்றியை அடைந்த எவரும் தோல்வியை சந்திக்கமால் எடுத்து உடனே வெற்றியை அடைந்திருக்க மாட்டார்கள். பல தோல்விகளை சந்தித்து தான் வெற்றியை அடைந்திருப்பார்கள். அதனால் தோல்வியை கண்டு பயம் கொள்ளாதீர்கள். தோல்வியானது வெற்றிக்கான முதல் படி என்று நினைத்து மறுபடியும் முயற்சியுங்கள் நிச்சயம் வெற்றியை அடையலாம்.

ஒருவர் குறை கூறினால் அதிலிருந்து வெளிவருவது எப்படி.?

பிறரை பற்றி நினைப்பது:

நம் கூட இருப்பவர்கள் அல்லது மற்றவர்கள் வெற்றியை அடைந்து விட்டால் அதையே நினைத்து வருந்துவது. அவர்கள் வெற்றியை அடைந்து விட்டார்கள், நாம் தோல்வியே சமித்து கொண்டே இருக்கின்றமோ என்று நினைப்பீர்கள். இப்படி நினைப்பதை தவிர்த்து விட்டு உங்களின் செயல்களில் இறங்குங்கள்.

மற்றவர்கள் சொல்ல வேண்டும்:

நீங்கள் வெற்றிக்கான செயல் ஏதவாது செய்யும் போது மற்றவர்கள் உங்களை பாராட்ட வேண்டும் என்று நினைக்க கூடாது. நீங்கள் செய்கின்ற செயலுக்கு வெற்றி அடைந்ததை நினைத்து நீங்களே மகிழ்ச்சி அடைந்து அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும்.

சொல் பேச்சு:

நீங்கள் ஏதாவது ஒரு விஷயம் செய்ய போகிறார் என்றால் அதனை மற்றவர்களிடம் சொல்வது, எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இந்த தொழிலை பற்றி மற்றவருடன் கூறும் போது அந்த செயலை பற்றி கூறுவார்கள். அவர்கள் சொல்வதை அப்டியே கேட்டு ரொம்ப கஷ்டம் என்று நினைத்து அதனை அப்படியே செய்யாமல் விடுவீர்கள். அதனால் மற்றவர்கள் சொல்வதை அனைத்தும் உண்மை என நம்பாதீர்கள்.

நம்முடைய வாழ்க்கையில் எல்லாமே நினைத்தது போல நடக்காது, அதனால் தொடர்ந்து முயற்சித்தாலே வெற்றி உங்களை தேடி வரும்.

உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்வது எப்படி.?

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now