உங்கள் செயலுக்கு முட்டுக்கட்டை போடுவது எது தெரியுமா.?

Advertisement

உங்களின் செயலுக்கு முட்டுக்கட்டை போடுவது எது.?

பொதுவாக அனைவருக்குமே ஏதவாது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும், இவை உங்களுக்கு பிடித்த விஷயமாக கூட இருக்கலாம். நமக்கு பிடித்த விஷயங்களை செய்ய வேண்டுமென்றால் அதற்காக முயற்சியை எடுப்போம். இருந்தாலும் ஏதோ ஒன்று தடுத்து தஹனை செய்ய முடியாமல் போகிவிடும், அவை என்னவென்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

Multitasking:

நீங்கள் ஒரு நேரத்தில் ஆசைப்பட்ட விஷயங்கள் எல்லாத்திலும் கவனம் செலுத்துவார்கள். இதனை ஆங்கில மொழியில் Multitasking என்று கூறுவார்கள். ஒரே நேரத்தில் பல விஷயங்களை செய்ய வேண்டும் என்று மூளையில் போட்டு திணித்தால் எந்த செயலையும், ஒழுங்காக செய்ய முடியாது. அதனால் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி அதனை நன்றாக செய்து முடியுங்கள்.

மோட்டிவேஷன் செய்ய வேண்டும்:

நீங்கள் ஏதவாது செயல் ஆரம்பிக்க போகிறீர்கள் என்றால் அந்த செயலை செய் நன்றாக வரும் என்று மற்றவர்கள்  மோட்டிவேஷன் செய்வார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. மற்றவர்கள் மோட்டிவேஷன் செய்தால் தான் அந்த செயலை செய்வேன் என்றும் நினைக்க கூடாது. நீங்கள் ஒரு செயல் செய்கிறீர்கள் என்றால் அந்த செயலில் நீங்கள் வெற்றியை அடைந்திருக்கிறீர்களோ அவை தான் மோட்டிவேஷன். இது எப்படி மோட்டிவேஷன் ஆகும் என்று கேட்கிறீர்களா, அதாவது உங்களுக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்காக முயற்ச்சியும் எடுக்கிறீர்கள், அதில் நீங்கள் ஆங்கிலத்தில் எழுத முடியும் என்றால் அதிலிருந்து உங்களால் ஆங்கிலத்தில் பேசவும் முடியும் என்று உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

தேவையில்லாத விஷயங்களுக்கு நேரத்தை செலவிடுவது:

உங்களின் செயலுக்கு முட்டுக்கட்டை போடுவது எது

இன்றையகாலத்தில் டீவி, மொபைல் போன்றவற்றில் அதிகமான நேரத்தை செலவிடுகின்றோம். இதில் உள்ள வீடியோக்களை பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் உங்களின் மகிழ்ச்சி அல்ல. உங்களின் ஆசைப்பட்ட விஷயங்களை செய்யும் போது அதில் வெற்றி அல்லது தோல்வி எது வந்தாலும் அதன் மூலமாக மகிழ்ச்சி அடைய வேண்டும்.

ஆளுமை திறனை வளர்த்து கொள்ள என்ன செய்ய வேண்டும்..

மற்றவர்கள் செய்கிறார்கள் என்று நினைப்பது:

உங்களுக்கு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும், ஆனால் இதனை நிறைய பேர் வைத்திருக்கிறார்கள் நாமும் எப்படி வைப்பது நினைப்பீர்கள். நீங்கள் ஹோட்டல் வைத்தால் அதன் மூலம் கிடைக்கும் அனுபவம் கிடையாது. அதுமட்டுமில்லாமல் நீங்கள் மற்றவர்கள் ஹோட்டல் விட சிறப்பாக பணியாற்றலாம்.

தவறு வந்து விடும்: 

புதிதாக ஏதவாது செயல் செய்ய போகிறார்கள் என்றால் அதில் ஏதும் தவறு வந்து விடுமோ என்று நினைக்கிறார்கள். இந்த தவறை சரி செய்யலாம், ஆனால் நீங்கள் தவராகிவிடுமோ என்ற பயத்தை சரி செய்ய முடியாது. அதனால் நீங்கள் எந்த செயலையும் பயப்படாமல் செய்யுங்கள்.

உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி கொள்வது எப்படி.?

மேலும் இது போல இன்னும் பல தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.  பொதுநலம்.காம் 
Advertisement