வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வெள்ளரிக்காய் சாப்பிடும் அனைவரும் இதை கட்டாயமாக தெரிந்துக்கொள்ளுங்கள்..!

Updated On: April 20, 2026 5:32 PM
Follow Us:
cucumber multi purpose in tamil
---Advertisement---
Advertisement

Cucumber Multi Purpose

இப்போது வெயில் காலம் வந்துவிட்டதால் வீட்டில் உள்ளவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் வெயிலின் தாக்கத்தை தாங்கி கொண்டு தான் வாழ்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் வெயில் காலத்தில் பெரும்பாலும் உடல் சூடு அதிகரித்து காணப்படும். இத்தகைய உடல் சூட்டினை குறைப்பதற்காக நீர்ச்சத்து உள்ள வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றையினை சாப்பிடுவார்கள். அதுபோல தினமும் சாப்பாட்டில் தயிரினையும் சேர்த்து கொள்வார்கள். இவ்வாறு நாம் சாப்பிடும் பொருட்கள் ஒன்று அல்லது இரண்டு விஷயங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது என்று நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு பொருளும் பல்நோக்கு திறன் கொண்டிருக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாத. அந்த வகையில் நாம் அனைவரும் அதிகமாக சாப்பிடும் வெள்ளரிக்காயின் Multi Purpose பற்றி தான் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய் ஆனது ஒரு கொடி வகையினை சார்ந்த காய் ஆகும். இத்தகைய வெள்ளரிக்காய் ஆனது குக்கர்பிடேசி என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை காயாகும்.

இத்தகைய வெள்ளரிக்காய் ஆனது 10 செ.மீ விட்டமும், 63 செ.மீ நீளமும் கொண்டதாக உருளை வடிவத்தில் காணப்படும். 

மேலும் இந்த வெள்ளரிக்காய் சீனா மற்றும் இமயமலையில் இருந்து தோன்றினாலும் கூட தற்போது இந்தையாவில் தான் அதிகமாக பயிரிடப்படுகிறது.

வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள்:

வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள்

 வெள்ளரிக்காயில் வைட்டமின் C, வைட்டமின் K, மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், கார்போஹட்ரேட், புரதம், கலோரிகள், சோடியம் மற்றும் மாங்கனீசு போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. 

மேலும் 1 வெள்ளரிக்காயில் மொத்தம் 96% நீர்சத்து மட்டுமே அதிகமாக காணப்படுகிறது.

உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா.. அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. 

சமையலுக்கு வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயினை பச்சையாக சாப்பிடுவது மட்டும் இல்லாமல் சமையலுக்கும் வெவ்வேறு வகைகளில் பயன்படுத்துகிறார்கள். அதாவது வெள்ளரிக்காய் சாம்பார், கூட்டு, பாயாசம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸ் என பலவற்றிற்கு பயன்படுகிறார்கள்.

ஆரோக்கியத்தில் வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய் மருத்துவ பயன்கள்

நீர்சத்து அதிகஅளவு வெள்ளரிக்காயில் நிறைந்து இருப்பதால் இதனை நாம் பச்சையாக சாப்பிடும் போது உடல் சூடு குறைகிறது மற்றும் உடலுக்கு போதுமான நீர்ச்சத்தும் கிடைக்கிறது.

பாக்டீரியாவை எதிர்க்கும் பண்பு வெள்ளரிக்காயில் அதிகளவு உள்ளது. இதனை நாம் சாப்பிடும் போது நோய்தொற்று வராமல் தடுக்கிறது மற்றும் இதில் உள்ள ஈரப்பதம் கண்களை வறண்டு போகச் செய்யாமல் குளிர்ச்சி அடையச் செய்கிறது.

தினமும் வெள்ளரிக்காயினை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க செய்யும்.

மேலும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாவும் மற்றும் நார்ச்சத்து குறைவாகவும் இருப்பதால் இதனை நாம் சாப்பிடும் போது உடல் எடை குறைவதற்கு மிகவும் உதவக்கூடியதாக உள்ளது.

சருமத்திற்கு வெள்ளரிக்காய்:

 கண்களை சுற்றியுள்ள கருவளையம், சூரிய ஒளியால் ஏற்படும் முகக்கருமை, தோலில் ஏற்படும் அலர்ஜி, முகத்தில் வலியும் எண்ணெய் பசை மற்றும் முகத்தில் உள்ள சுருக்கம் என இவற்றை எல்லாம் நீக்கி முகத்தை பளிச்சென்று வைப்பதற்கு வெள்ளரிக்காய் ஆனது மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாக உள்ளது.  

அதுமட்டும் இல்லாமல் வெள்ளரிக்காய் ஜூஸ் குடிப்பதன் காரணமாக தலை முடி வளரவும் செய்யும்.

கோடைக்காலத்தில் தயிர தினமும் சேத்துக்கிறீங்களா.. அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி…. 
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

banana tree multi purpose in tamil

உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

பனை மரம் தெரியும் ஆனா அதுல இவ்ளோ விஷயம் இருக்குனு தெரியாம போச்சே..!

 Multi Purpose of Pirandai in Tamil

உங்க வீட்ல பிரண்டை செடி இருக்கா..! அப்போ இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்..!

young coconut water multipurpose in tamil

இந்த வெயில் காலத்தில் இளநீரை குடிப்பதற்கு முன்பு இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

இலவங்கப்பட்டையை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!

கோடைக்காலத்தில் தயிர தினமும் சேத்துக்கிறீங்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி.?

multipurpose of ponnanganni keerai in tamil

நீங்கள் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுபவர்களா..! அப்போ இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா..?

multipurpose of poovarasu maram

உங்க வீட்ல பூவரச மரம் இருக்கா.! அப்போ இந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு..

Coconut Tree in Tamil

வீட்டில் தென்னை மரம் இருந்தால் மட்டும் போதாது இந்த விஷயமும் தெரிந்திருக்கணும்..!